'கோவையில் கழிவுகளை அகற்ற இன்று முதல் ரோபோ!'.. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோயம்புத்தூர் மாநகராட்சியில் இன்று கழிவுகளை அகற்ற ரோபோட்டிக் 2.0 இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் கொரொனா தொற்று வேகம் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது. அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவையில் இதுவரை 80,623 பேருக்கு பரிசோதனை செய்ததில் 1,591 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தினந்தோறும் கண்காணிக்கப்படுகின்றனர். மேலும், வாகனங்கள் மூலம் அனுமதி இன்றி உள் நுழைவதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாநகராட்சியில் கழிவுகளை அகற்ற ரோபோடிக் 2.0 என்ற இயந்திரம் இன்று வழங்கப்பட்டுள்ளது. இது பயன்பாட்டிற்கு வரும் போது மனித கழிவுகளை மனிதர் அகற்றும் சூழல் இல்லாத நிலை ஏற்படும். தமிழகத்தில் உள்ள 34 நகரங்களுக்கும் கழிவுகளை அகற்ற ரோபோடிக் 2.0 இயந்திரம் வழங்கப்பட இருக்கின்றது. இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
துப்புரவு தொழிலாளர்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாக்கும் நோக்கில், பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், 'கோவையில் நோய் தொற்று அதிகமாக வர துவங்கி இருக்கின்றது. வெளிமாவட்டங்களிலிருந்து இரு சக்கர வாகனங்களில் அனுமதி இன்றி வருபவர்களால் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து யாராவது அனுமதி இன்றி வந்திருப்பது தெரியவந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தொற்று ஏற்பட்டவர்களை அன்பாக பாதுகாத்தாலே நோய் குணமாகி விடும். முகக்கவசம் போடாதவர்களிடம் பேசாதீர்கள். அவர்களிடம் இருந்து விலகி இருங்கள்.
இதற்கிடையே, மாநகராட்சியின் ஒரு சில கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து தொற்று வந்து கொண்டு இருக்கின்றது. டெஸ்ட் முடிவுகள் தாமதம் ஏற்பட கூடாது என்பது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு இப்போது தேவையில்லை. தேவைப்பட்டால் மருத்துவதுறை ஆய்வு செய்து தெரிவிப்பார்கள். முழு ஊரடங்கு கொண்டு வந்தால் தொழிலாளர்கள் பாதிப்படைவார்கள். அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் முழு ஊரடங்கு தேவைப்படாது' என்று தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
