'தேர்தல் பிரச்சாரத்தில் நடந்த துயரம்'... 'திடீரென மயங்கி விழுந்து இறந்த எம்பி'... சோகத்தில் உறைந்த தொண்டர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரச்சாரத்தின் போது மாநிலங்களவை எம்.பி முகமது ஜான் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனையடுத்து, அரசியல்கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், இன்று ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் சுகுமாறனுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது ஜான்.
இடைவேளையில் வீட்டிற்குச் சென்று மதிய உணவு சாப்பிட்ட அவர், மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனையடுத்து, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனையின்போது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதனையடுத்து, அவரது உடல் வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பிரச்சாரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது ஜான் இறந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க சார்பில் 2019-ம் ஆண்டு அவர், மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு இன்னமும் 4 ஆண்டுகள் பதவிக் காலம் உள்ளது. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் சிறுபான்மைத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
வக்பு வாரிய தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.முகம்மத்ஜான் இன்று (23.03.2021) மாலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன். கழகத்திலும், மக்கள் பணியிலும் அவர் ஆற்றிய பணிகள் மெச்சத்தக்கது. (1/2) pic.twitter.com/F4N9Ct2ai8
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) March 23, 2021