'ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்...' - தேர்தல் பரப்புரையில் முதலைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காவிரி டெல்டா மாவட்டங்களில், ஒருபோதும் ஹைட்ரோ கார்பன் திட்டம் கிடையாது என்றும், அதனை ஒருபோதும் ஆளும் அதிமுக அரசு அனுமதிக்காது என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, கந்தர்வக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது முதலமைச்சர் பேசுகையில், ஊர் ஊராக தொண்டை காய பேசும் அளவிற்கு அதிமுக அரசின் சாதனைகள் உள்ள நிலையில், எங்கள் அரசு எதுவும் செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் மேற்கொள்வதாக, முதலமைச்சர் குற்றம் சாட்டினார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய ஒரே அரசு அதிமுக அரசு தான் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்று முதலமைச்சர் உறுதிபட தெரிவித்தார். டெல்டாவில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அதிமுக அனுமதிக்காது என்றும் அவர் கூறினார்.
பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளின் தென்னை விவசாயிகளின் நலன் காக்க, கொப்பரைத்தேங்காய் கொள்முதல் மற்றும் தேங்காய் சேகரிப்பு மையங்கள் முழுவீச்சில் அமைக்கப்படும் என்றும், மக்களுக்கு முதலமைச்சர் நம்பிக்கை வாக்குறுதி கொடுத்தார்.

மற்ற செய்திகள்
