அவ்ளோ வலி இருந்தும் ‘பாட்ஷா’ ரஜினி மாதிரி சிரிச்சிட்டே போறாரு பாருங்க.. ‘மனசுல நின்னுட்டீங்க தவான்’.. ரசிகர்கள் உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 ரன்னில் ஷிகர் தவான் சதத்தை தவறவிட்டார்.
இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று(23.03.2021) புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் தொடக்க ஆட்டக்காரர்களக களமிறங்கினர். இதில் ரோஹித் ஷர்மா 28 ரன்கள் எடுத்திருந்தபோது பென் ஸ்டோக்ஸ் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார்.
இதனை அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் அரைசதத்தை கடந்திருந்த நிலையில் மார்க் வுட்டின் ஓவரிக் கோலி (56) அவுட்டாகினார். அடுத்த வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் 6 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.
Heartbreak for Shikhar #Dhawan as he is dismissed for 98 💔🥺
Looked in magnificent touch right from the beginning and dot balls from the other end might have put pressure on him.
Still an outstanding innings by #Gabbar 👍 #INDvENG#ENGvIND pic.twitter.com/NbFbHrinap
— Raghav Acharya (@raghavacharya95) March 23, 2021
Pain 💔#INDvsENG_2021 #ENGvIND #ViratKohli #shikhardhawan#dhawan pic.twitter.com/Yv5WCYzg3W
— soul🌻 (@nostalgic_soull) March 23, 2021
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த தவான் அதிரடி காட்ட ஆரம்பித்தார். 98 ரன்கள் எடுத்திருந்த பென் ஸ்டோக்ஸ் வீசிய ஓவரில் எதிர்பாராத விதமாக இயன் மோர்கனிடம் கேட்ச் கொடுத்து தவான் அவுட்டானார். 2 ரன்னில் சதத்தை தவறவிட்ட வலி இருந்தாலும், முகத்தில் புன்னகையுடன் தவான் சென்றார். இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு பாராட்டி வருகின்றனர்.
தவனைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னில் அவுட்டாக, அடுத்ததாக க்ருணல் பாண்ட்யா களமிறங்கினார். கடைசி நேரத்தில் கே.எல்.ராகுல்-க்ருணல் பாண்ட்யா கூட்டணி இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இதில் ராகுல் 62 ரன்களும், க்ருணல் 58 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்களை இந்தியா குவித்தது. இந்த நிலையில் 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.