வேலூர் அருகே மீண்டும் ‘நில அதிர்வு’.. தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூர் அருகே நில அதிர்வு ஏற்பட்டதால் மக்களிடையே அச்சம் நிலவியது.
![Earthquake of magnitude 3.5 strikes in Vellore Earthquake of magnitude 3.5 strikes in Vellore](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/earthquake-of-magnitude-35-strikes-in-vellore.jpg)
வேலூர் அருகே இரண்டாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், ‘வேலூரில் இருந்து 50 கிலோமீட்டர் மேற்கு-வடமேற்கு பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் வேலூர் அருகே அளவில் 3.5 புள்ளியாக நில அதிர்வு ஏற்பட்டது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 23-ம் தேதி வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இதேபோன்று நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவும் குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக அவ்வப்போது வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)