‘நள்ளிரவு கடலுக்கடியில் பயங்கர நிலநடுக்கம்’!.. ‘யாரும் கடற்கரைக்கு போக வேண்டாம்’.. சுனாமி எச்சரிக்கை விடுத்த 2 நாடுகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்தென்பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கடற்கரை பகுதிகளுக்கு அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா கடற்பரப்பிற்கு அருகே தென்பசிபிக் பகுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நியூஸிலாந்து, வணூட்டு, புதிய கலிடோனியா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலில் ரிக்டர் அளவுகோலில் 7.2 என்று கூறப்பட்டது, பிறகு 7.5 என்றும், அதன்பின் 7.7 என்றும் அதிகரிக்கப்பட்டது. கடலுக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்படும் இத்தகைய பெரிய பூகம்பங்களினால் சுனாமி பேரலைகள் எழுந்து கடற்கரைகளைத் தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய வானிலை மையம் உறுதி செய்திருந்தது. இதனையடுத்து அடுத்த 3 மணி நேரத்தில் சுனாமி பேரலைகள் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பேரலைகள் 0.3 மீட்டர் முதல் 1 மீட்டர் வரை எழும்பும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று நியூஸிலாந்து அரசு எச்சரித்துள்ளது. மேலும் பாதுகாப்பான இடங்களுக்கு விரைவாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நியூஸிலாந்தின் தொலை வடக்குத் தீவின் வடக்குப்பகுதிக்கும், தி கிரேட் பேரியர் தீவு, கிழக்குக் கடற்கரை பகுதிகளை சுனாமி தாக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நியூசிலாந்து கடலோரப் பகுதிகள் கரையில் வலுவான மற்றும் அசாதாரண நீரோட்டங்கள் மற்றும் கணிக்க முடியாத எழுச்சிகளை காண முடியும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
