இந்த சாப்பாட்டுல என்னமோ கெடக்குது...! 'என்னன்னு செக் பண்ணி பார்த்தப்போ, அதில்...' - நிச்சயதார்த்த விழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூரில் நிச்சியதார்த்த நிகழ்வின் போது ஓட்டலில் பரிமாறப்பட்ட உணவில் கண்ணாடி துண்டுகள் இருந்ததால் பந்தியில் சாப்பிட்டவர்களுக்கு வயிறு, தொண்டை பகுதியில் எரிச்சல் மற்றும் வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை அடுத்த அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தப் பகுதியில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பெண் வீட்டார் சத்துவாச்சாரி மாவட்ட அறிவியல் மையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் காலை உணவும் நிச்சயதார்த்தம் முடிந்ததும் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதுள்ளது.
இந்நிலையில் மதிய உணவின் போது இரு வீட்டினர் மற்றும் உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது ஒரு சிலரின் இலையில் கண்ணாடி துகள்கள் மற்றும் துண்டுகள் இருந்ததுள்ளது. ஓட்டல் நிர்வாகத்தினரிடம் தெரிவித்ததில் அவர்கள் முறையான பதிலை கொடுக்காததால் வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் நிலையத்தில் அளித்துள்ளனர்.
மேலும் உணவு சாப்பிட்ட 6 பேருக்கு வயிறு, தொண்டை பகுதியில் எரிச்சல் மற்றும் வலி ஏற்பட்டதால் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக சென்றுள்ளனர். இந்த சம்பவம் இருவீட்டாரை மட்டுமல்லாது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து கூறிய பெண் வீட்டார், ஓட்டலில் பரிமாறப்பட்ட உணவை சாப்பிடும் போது இலையில் டியூப் லைட்டில் இருந்து உடைந்த கண்ணாடி துண்டு பாகங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
