‘யாருக்கு ஓட்டு போடுறீங்க.. மோடி கேமரா பிக்ஸ் பண்ணியிருக்காரு.. ஜாக்கிரத’..பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 17, 2019 11:00 AM

அந்த காலத்தில் தேர்தல் என்பது படை வலிமையைத் திரட்டி, ஒருவரை வீழ்த்துவது என்றால், இந்த காலத்தில் கருத்து என்று சொல்லப்படும் ஒரு குறிப்பிட்ட ஐடியாலஜியை கொண்டு சென்று சேர்த்து, மக்களை தம் கருத்தால் தன் பக்கம் ஈர்த்துதான் வெற்றிபெற முடியும். எதிர் நிற்பவரை வீழ்த்த முடியும்.

\'Modi installed Camera to watch voters\', BJP MLA Controversy Speech

அப்படி நட்புக்காகவோ, கமிட்மெண்ட்டுகளுக்காகவோ, உண்மையில் அந்த குறிப்பிட்ட சித்தாந்தம் கொண்ட கட்சியை பிடித்தோ வாக்களிக்கும் வாக்காளர்களிடம் வடிவேலு காமெடியில் வருவது போல, ‘யாருக்கு ஓட்டு போட்ட?’ என்று கேட்டால், ‘சத்தியமா ஒனக்குதான்னே போட்டேன்’ என்று வாக்காளர் சொல்லக்கூடும்.

ஆனால் உண்மையில் அவர் யாருக்கு ஓட்டு போட்டிருப்பார் என்று வேட்பாளர் தரப்பினர் குழம்புவதுதான் நிதர்சனம். இந்நிலையில் குஜராத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர், தேர்தலில் வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போடுகிறார்கள் என்பதை கண்காணிக்க மோடி கேமராவை வாக்குச் சாவடியில் பொருத்தியுள்ளார் என்று கொளுத்திப் போட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் பாஜக எம்.எல்.ஏ ரமேஷ் கடாரா, தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசும்போது, அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ்க்கு யார் வாக்களிக்கிறார்கள், பாஜகவுக்கு யார் வாக்களிக்கிறார்கள் என்பது கண்காணிக்கப்படும் என்றும், ஒருவேளை குறைவான வாக்குகள் பதிவாகும் வாக்குச் சாவடியில் பணிகள் நிறுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.