'கனிமொழி வீட்டில் எதுவும் கெடைக்கல.. ஆனா ரெய்டு போனது ஏன் தெரியுமா?’.. சத்யப்பிரதா சாஹூ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 16, 2019 10:59 PM

தூத்துக்குடியில் உள்ள குறிஞ்சி நகரில் திமுக சார்ர்பில் நாடளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் வருமான வரி சோதனை நிகழ்த்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IT Raid in Thoothukudi Kanimozhi Home, DMK Cadres Protest

பாஜகவின் சார்பாக தமிழிசை சவுந்தர்ராஜன் போட்டியிடும் அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி இன்று தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்ட நிலையில், மாலை 6 மணிக்கு மேல் அவரது இல்லம் மற்றும் அலுவலகங்களில் 10க்கும் மேற்பட்ட ஐடி அதிகாரிகள் வருமான வரிசோதனையை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நிகழ்த்தினர்.

அதுமட்டுமல்லாமல், தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் விட்டில் நிகழ்த்தப்படும் வருமானவரித்துறையின் இந்த திடீர் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சோதனை நடைபெறும் வீட்டின் முன்பாக, திமுகவின் ஆதரவாளர்கள் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.இந்த ரெய்டு முடிந்ததற்கு பின்னர் பேசியுள்ள கனிமொழி, 2 மணி நேரமாக நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர்களின் ஆசை நிராசையாகிவிட்டதாக பேசியுள்ளார்.

மேலும், இதுபோன்ற சோதனைகளுக்கெல்லாம் அஞ்சுகிற கட்சி திமுக இல்லை என்றும் தேர்தலை ரத்து செய்யும் நோக்கிலேயே சோதனை நடத்தியிதாகவும், எதிர்க்கட்சி வேட்பாளராக இருப்பதாலேயே தன் வீட்டில் சோதனை செய்ய வந்ததாகவும்,சோதனைக்கு பிறகு நேரில் ஆஜராகுமாறு தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி விளக்கம் அளித்துள்ள தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ  மாவட்ட ஆட்சியரின் அலுவகலத்திற்கு ஒரு எண்ணில் இருந்து வந்த புகாரின் அடிப்படையில், ரெய்டு சென்றதாகவும், ஆனால் கனிமொழியின் வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் குறிப்பிடுள்ளார்.