’தமிழ்நாடுனா வேற ஒரு நாடுன்னு நெனைச்சுக்குறீங்க.. அகந்தையில வெச்சிட்டாங்க.. அதோட பேரு இதான்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 17, 2019 11:22 PM

எஸ்.வி.சேகர் பிஹைண்ட்வுட்ஸ்க்கு அளித்த பிரத்யேக பேட்டி:-

BJP Spokesperson SV Shekar Controversial Interview Elections2019

நீங்க இன்னும் பிஜேபில இருக்கீங்களா?

என் யூடியூப் சேனலில், வாட்ஸ்-ஆப்பில் பேசுகிறேன். பிரச்சாரம் செய்வதற்கான நட்சத்திர பேச்சாளர் என்கிற அங்கீகாரத்தை தந்து பாஜக என்னை அழைக்காததால், நான் அழையா இடத்தில் சென்று பேசவில்லையே தவிர, என்னளவில் நான் நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவில் பிரதமராவதற்குண்டான எல்லா பிரச்சாரங்களையும் நான் செய்துகொண்டிருக்கிறேன்.

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்தது சித்தாந்த ரீதியாக தவறு என்று சுப்ரமணிய சுவாமி கூறுகிறாரே?

ஐடியலாஜி என்றால் என்ன எனக்கு புரியல. நாம் வசிக்கும் தெருவில் இருப்பவர்களை நமக்கு பிடிக்கவில்லை என்பதால், நாம் தெருவை காலி செய்துகொள்வோமா இல்ல முகத்தில் கர்ச்சீஃபை கட்டிக்கொண்டு போய்விடுவோமா, இல்ல வீட்டை காலி செஞ்சுக்குவோமா? சண்ட போடுற அண்ணன் தம்பி சேர்ந்துடுறதில்லையா? கருத்துக்கணிப்புக்காக பத்திரிகையையே கொளுத்துறத நீங்க பாக்கலயா? தேர்தல் என்பது ஒருமேத்தமேடிக்ஸ். இதில் கரெக்டான கூட்டணியை அமைத்து வெற்றி பெற வேண்டும் அவ்வளவுதான்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்கள். ஆனால் சில அதிமுக எம்.பிக்கள் நீட்டை அனுமதிக்க மாடோம் என்கிறார்கள். மோடியை பொறுத்தவரை அதிமுகவை ஒப்புக்கொள்ள வைத்திவிடுவோம் என்கிறார்கள். யாரை நம்புவது?

டெல்லி தலைமையைத்தான் நம்பணும். டெல்லிக்கு கீழதான் எல்லாம். அரசு என்பது டெல்லிதான். இங்கிருப்பவர்கள் ஓட்டு வாங்குவதற்காக தவறான செய்தியை சொல்வார்கள். நீட் இந்தியாவுக்குள் வந்து நீட் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. அரசியல்வாதிகள் பலரும் தனியார் கல்வி நிறுவனங்கள் மூலம் கொள்ளையடித்தார்கள். நீட்டினால் பாதிக்கப்பட்ட அனைவரும் தாழ்த்தப்பட்ட, கிராமப்புற, ஏழை மாணவர்கள். அந்த மாணவி இறந்து போனார். அவர் பேர் என்ன?  (பேட்டியாளர் அனிதா என்று நினைவுபடுத்துகிறார்) அனிதா. அனிதா. அந்த பொண்ணு காலேஜ்லயே சேரல. ஆனால் டாக்டர். அனிதான்னு போட்டு யார ஏமாத்துற செயல் இது. +2 படிச்ச அந்த பொண்ணு தற்கொலைக்கு முதல் நாள், ‘நா வேற ஒண்ணு படிச்சுட்டு கூட அடுத்த வருடம் அந்த தேர்வை எழுதிக்கிறேன்’ என கூறினார் அந்த பெண். அனிதாவை குறைந்த மதிப்பெண் வாங்கிய இன்னொரு பெண் நீட்டில் அதிக மதிப்பெண் எடுத்தார். ஆனால் அனிதாவின் அண்ணன், திருமாவளவனுக்குத்தான் ஆதரவு என சொல்லிவிட்டாராம். இது திமுகவுக்கு ஷாக் ஆகிறதாம். ஆனால் கஷ்டப்படு அனிதாவுக்கு பேசியது திமுகதான், ஆனால் அந்த பெண்ணின் அண்ணன் திருமாவுக்கு ஆதரவளிப்பதால் ஷாக் ஆகிறாராம். அந்த பெண்ணின் சாவை அரசியலாக்கினார்கள். அந்த கீழ்த்தரமான புத்தி பாஜகவுக்கு இல்லை.

சர்வாதிகாரமாக இருக்கே? கவுண்ட்டர்லாம் இருக்கக் கூடாதா? கேள்வியே கேக்க விடமாட்டுங்குறீங்களே?

அப்படிதான் இருக்கும். பாசிச ஆட்சிங்குறீங்க. இதுகூட இல்லன்னா எப்படி?

அதிமுக 2 ஆ ஒடைஞ்சிருக்கு. அதிமுக, அமமுகனு..

எங்க ஒடைஞ்சிருக்கு. சசிகலாவை ஜெயலலிதா ஏன் வெளில அனுப்பினாங்க. தினகரனை பொருத்தவரை அம்மா மருத்துவமனையில் இருக்கும்போதிலிருந்துதானே உள்ளயே வராரு. அந்த கட்சியில் இருந்த 8 வருடத்தில் சசிகலாவை பாத்து பேசுனதில்ல. எனக்கு டிடிவி தினகரனை பிடிக்கும். எப்படி தண்டனை கொடுத்தாலும் நான் பாக்காத ஜெயிலா என்பதுபோல் ஏமாற்றுத்தனத்தோடு உச்சகட்டத்தோடு சமாளிப்பார். அது ஒரு அரசியல் தலைமையா?

சௌகிதார்னு சொல்லனுமா? காவலாளின்னு சொல்லனுமா? தமிழ்நாட்டில் இந்த பேரு எடுபடுமா?

காவல்காரன்னு சொன்னா இந்தியா முழுவதும் எடுபடுமா? தமிழ்நாட்டுக்கு மட்டும்னு எல்லாம் ஒண்ணு இல்ல. இந்தியா ஒன்றுபட்ட இந்தியாதான். நீங்க என்னவோ தமிழ்நாடு அப்படின்னு பேர் வெச்சா வேற ஒரு நாடுன்னு நெனைச்சுக்குறீங்க. அது ஒரு மாநிலம். அது ஏதோ தெரியாம உணர்ச்சிவசப்பட்டு தமிழ்நாடுன்னுட்டாங்க. தமிழகம்னுதான் வெச்சிருக்கனும். தமிழ்நாடுங்குற பேர் சரியில்ல. சரியா வைக்கல. அது ஏதோ அகந்தையோட வெச்சதுனால அறியாமையினால அத நிஜம்னு நம்புறாங்க. தமிழகம்தான் சரி. எல்லா மாநிலமும் அப்படித்தான்.

பாஜக நிறைய வாக்குறுதி கொடுத்துருக்காங்க. 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைச்சதுக்கான டேட்டா இல்லயே?

ஆயிரம் திருடன் சேர்ந்து ஒரு காவல்காரனை திருடன்னு சொல்றதுக்கு முயற்சி செய்றதுமாதிரி, உங்களுக்கு எல்லா டேட்டாக்களும் கொடுக்க வேண்டியதில்லை. ராணுவ ரகசியங்களை எல்லாம் கொடுக்கணும்னு சொல்லுவீங்க. இருட்டில் இருக்கும் பூனை போல, எதுவுமே கண்ணுக்கு தெரியல கதைபோல. எந்த டேட்டாவ கொடுக்கனும், கொடுக்கக் கூடாதுன்னு அரசாங்கத்துக்குத் தெரியும்.

ரஜினியின் ஆன்மீக அரசியலை பாசிட்டிவாக பார்த்தீர்கள். ஆனால் கமல் களத்துக்கு வந்துவிட்டார். ரஜினி இன்னும் வரவில்லையே? எப்படி பார்க்கிறீர்கள்.

ரஜினி இதை வெச்சு சம்பாதிக்க போகிறாரா? கமல் படம் நடித்தார். சம்பாதிச்சது போதும்னு அரசியலுக்கு வந்துவிட்டார். ரஜினி அப்படியல்லாம் இன்னும் உழைக்கனும்னு சொல்றார். தனது அமைப்பை சரிசெய்து வைத்திருக்கும் ரஜினி எப்போது வரனும்னு கேட்க, நமக்கு எந்த உரிமையும் இல்லை. நீங்க என்ன ரஜினி மன்றத்துல இருக்கீங்களா? உங்களுக்கு தருவாரான்னு தெரியலாம்.

பார்ட்டி டிசிப்ளினில் நீங்க ஒரு தெளிவான பார்வையோடு இருக்கிறீர். ஆனால் சுப்ரமணிய சுவாமி அப்படி பொது வெளியில் இல்லையே?

அதை பார்ட்டிதான் டிசைட் பண்ணனும். நயன் தார பற்றி ராதாரவி தவறாக பேசினார். நானும் அதுபோல் ஒரு கருத்தை பேஸ்புக்கில் பகிர்ந்தேன். வழக்கு தொடர்ந்தார்கள். நான் வருத்தம் தெரிவித்தேன். ஆனால் லயோலா கல்லூரியில் அவ்வளவு பெரிய இடத்தில் இந்துக்கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில், ஆளடி உயர ஓவியங்களை காட்சிக்கு வைத்தார்கள். ஆனால் அந்த கல்லூரி இயக்குநர் தனக்கு அதுபற்றி தெரியாது என்று மன்னிப்பு கேட்டவுடன், எல்லாரும் இப்புக்கொண்டார்கள். சிறுபான்மையினருக்கு சாதகமாக நீதிமன்றம் இருக்குன்னு நான் சொல்ல முடியுமா? நான் சொல்ல மாட்டேன். தமிழ்நாட்டையே கலக்கவிருக்கிற நாம் தமிழர் சீமான் தேர்தல் அறிக்கையை விடுகிறார். பவர் ஸ்டார் சீனிவாசன்தான் இன்னும் தேர்தல் அறிக்கை விடவில்லை. யாரிடம் பணம் வாங்கினாலும் திருப்பி தரவேண்டாம் என்றேனும் சொல்லுவார்.

Tags : #LOKSABHAELECTIONS2019 #SVSHEKAR