'ஒரு நிமிடத்தில் நாட்டியமாடும் விரல்'... 'அடுத்தடுத்த செகண்ட்டில் 46 ஸ்டைல்'... மாஸ் காட்டும் இளைஞர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒரு நிமிடத்தில் 46 ஸ்டைல்களில் தலைமுடியை மாற்றி இளைஞர் ஒருவர் கவனம் ஈர்த்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்ற இளைஞர், தேனியில் உள்ள நண்பர்களைப் பார்க்க வந்துள்ளார்.
அங்கு நண்பர்களுடன் பேசி கொண்டிருக்கும்போதே, அவரது கைகள் அவரது தலைமுடியை விதவிதமான அலங்காரங்களுக்கு மாற்றிக் கொண்டே இருந்து.
அதிகபட்சம் ஒரு நிமிடத்துக்கு ஒரு ஹேர்ஸ்டைல் என்று மாற்றிக்கொண்டே இருக்கிறார்.
அவரது தலைமுடியும் அவரது விரல்களுக்கு பணிந்து 46 விதமாக சிகையலங்காரம் காட்டுகிறது.
இதை பார்க்கும் தேனி மக்கள் ஒரு நிமிடமாவது நின்று வியந்து பார்க்கின்றனர்.
5ம் வகுப்பு வரை படித்திருக்கும் மாரிமுத்து, கோவில்பட்டியில் கட்டுமான வேலை, பரோட்டா மாஸ்டர் என கிடைக்கும் வேலைகளை செய்து வருகிறார்.
நண்பர்கள் தன்னை சினிமாவில் நடிக்குமாறு ஊக்குவிப்பதாக கூறும் மாரிமுத்து, சினிமாவில் நடிக்க எப்படி, யாரை அணுகுவது என தெரியாது என்று புன்னகையுடன் கூறுகிறார்.

மற்ற செய்திகள்
