'மிட்நைட்ல வந்த அபாய ஒலி...' 'இத கொஞ்சம்கூட எதிர்பார்க்காமா சிசிடிவிக்கு துணி கட்டி மறைச்சுக்கிட்டு இருந்தப்போ தான்...' - அதிர்ச்சியில் பொதுமக்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேனி மாவட்டம், போடி நகரில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையின் வாடிக்கையாளர்கள் சில்லமரத்துப்பட்டி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் அதிகம் உள்ளனர்.
இந்த மக்களின் வசதிக்காக போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் போடியில் இருந்து தேவாரம் செல்லும் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திலிருந்து இன்று (29-10-2020) நள்ளிரவு அபாய ஒலி வந்துள்ளது. என்ன ஆயிற்று என பதறிப்போன மக்கள் வெளியில் வந்து பார்த்தபோது தான் விஷயம் புரிந்தது.
Udanadiyaaha இதுகுறித்து போடி தாலுகா போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து போடி தாலுகா போலீசார் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஏ.டி.எம். மையத்தில் உள்ள இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இன்று காலை வரை சோதனைகள் நடைபெற்றுள்ளது.
இதன்பிறகு வங்கி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு ஏ.டி.எம்-மில் இருந்த பணம் திருட்டு போகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் திருட வந்த மர்ம நபர்கள் உள்ளே இருந்த கேமராவை துணியால் மூடிவிட்டு திருட முயன்றுள்ளனர். சம்பவம் குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, திருட வந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற சம்பவம் கிராம மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.