'தல தோனியின் மகள் கையில் இருக்கும் குழந்தை'... 'பாஸ் நாங்க சுகர் பேசன்ட், சஸ்பென்ஸ் வைக்காதீங்க'... தலையை பிய்த்து கொண்ட நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Aug 11, 2020 09:58 AM

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து எந்த செய்திகள் வந்தாலும் அது உடனே ரசிகர்கள் மத்தியில் ஒரு வித உற்சாகத்தை ஏற்படுத்தி விடும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோனி அவரது வீட்டில் பைக் ஓட்டுவது மற்றும் அவரது மகளுடன் விளையாடுவது என சில வீடியோகள் வைரலாகியது. அதற்குப் பிறகு தோனி குறித்து எந்தவித செய்திகளும் வரவில்லை. ஊரடங்கு நேரத்தில் தோனி என்ன செய்து கொண்டு இருக்கிறார் என ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் சமூக வலைத்தளங்களில் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

Sakshi Dhoni shares pics of daughter Ziva holding a baby

இந்நிலையில் தோனியின் மகள் ஷிவா தோனி குழந்தை ஒன்றைக் கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை தோனியின் மனைவி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து அந்த குழந்தை யாருடையது? என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். ரசிகர்கள் பலரும் தயவு செய்து சஸ்பென்ஸ் வைக்காதீர்கள் என்று பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஷிவா தோனிக்கு தற்போது 5 வயதாகும் நிலையில், தனது கைகளில் குழந்தையை வைத்திருப்பது போன்ற படங்களை, தோனியின் மனைவி ஷாக்சி பகிர்ந்தது தான் மிச்சம். உடனே அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

ரசிகர்கள் பலரும் அந்த குழந்தை ஆணா இல்லை பெண்ணா என்று விவாதித்து வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த குழந்தை ஹர்திக் பாண்டியாவின் குழந்தையாக இருக்குமோ, என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். சீக்கிரம் சஸ்பென்ஸை உடையுங்கள் என தோனியின் மனைவி ஷாக்சியை டேக் செய்து கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

View this post on Instagram

❤️

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sakshi Dhoni shares pics of daughter Ziva holding a baby | India News.