பாக்க 'மாம்பழம்' மாதிரி இருந்தாலும்... எக்கச்சக்க 'மருத்துவ' குணம் இருக்கு... களைகட்டும் 'முட்டை' பழம் விற்பனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குற்றாலம் சீசனையொட்டி வருடா வருடம் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இதனையொட்டி மாம்பழம், பலாப்பழம் உள்ளிட்ட பழங்கள் விற்பனை களை கட்டும். இது மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாடு பழங்களையும் விற்பனை செய்வர். இந்த வருடம் கொரோனாவால் சீசன் பயணிகள் வரவில்லை என்றாலும் பழங்கள் விற்பனை வழக்கம்போல உள்ளது.

குறிப்பாக முட்டை பழம் என்றவொரு பழம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அச்சு அசலாக மாம்பழம் போல் காட்சி அளிக்கும் இந்த பழம் முட்டை பழம் என்றழைக்கப்படுகிறது. மருத்துவ குணம் கொண்டதாக கூறப்படும் இந்த பழத்தின் சதைப்பகுதி மாவு போல் உள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள், ''இந்த பழம் சளிக்கு மருந்தாகவும், ஜீரண மண்டலத்துக்கு பாதுகாப்பாகவும் இருக்க கூடியதாகும். இது மாம்பழ சீசனையொட்டி காய்த்து பழம் பறிக்கப்படும். தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியிலும் கேரளாவிலும் மலையடிவார பகுதிகளையொட்டி இந்த பழம் விளைவிக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு மாம்பழம் போல் காட்சி அளித்தாலும் உள்ளே சதைப்பகுதி மாவு போல் இருக்கும். இந்த பழங்கள் கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்கிறோம்,'' என்றனர்.

மற்ற செய்திகள்
