‘அம்மா எந்திரிம்மா, வா கடைக்கு போவோம்’.. பெற்றோர் இறந்ததை அறியாத பிஞ்சு குழந்தை.. மனதை உருக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 25, 2019 04:50 PM

பிஞ்சு குழந்தை தவிக்கவிட்டு பெற்றோர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Parents committed suicide at Kumbakonam

கும்பகோணத்தை சேர்ந்த பாலமுருகன் அப்பகுதியில் உள்ள அருணா என்ற பெண்ணை கடந்த 4 வருடங்களுக்கும் முன்பு காதல் திருமணம் செய்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததால் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 2 வயதில் நரேஷ்மதன் என ஆண்குழந்தை உள்ளது.


இந்நிலையில் நீண்ட நேரமாக வீட்டின் வெளியே குழந்தை அழுது கொண்டிருந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர், வீட்டின் அருகே சென்று சன்னல் வழியே எட்டி பார்த்துள்ளனர். அங்கு பாலமுருகன், அருணா சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருவர் சடலத்தையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பெற்றோர் இறந்தததை அறியாத பிஞ்சு குழந்தை, ‘அம்மா எந்திரிம்மா, அப்பா என்ன பண்றீங்க, வா கடைக்கு போவோம்’ என அழுத்தை காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இவர்கள் இறந்தது தற்கொலையா? இல்லை வேறு ஏதேனும் உள்ளதா? என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 வயது குழந்தையின் எதிர்காலத்தை கருதாமல் உயிரிழந்த பெற்றோரால், அப்பகுதியில் பெரும் சோகத்தை உள்ளாக்கியுள்ளது.

Tags : #SUICIDE #PARENTS