‘போன் வீட்லதான் இருக்கு’!.. ‘ஆனா அப்பாவை காணோம்’.. சென்னைக்கு தேடி வந்த மகனின் உருக்கமான பதிவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் தங்கிருந்த தனது தந்தையை காணவில்லை என இளைஞர் ஒருவர் ட்விட்டரில் உதவி கோரி பதிவிட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த கார்த்திக் நாராயணன் என்ற இளைஞர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் ட்விட்டரில் கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில், சென்னையில் தனியாக வசிக்கும் 63 வயதான தனது தந்தை நேற்று முன்தினம் மாலை முதல் தனது அழைப்பை ஏற்கவில்லை என தெரிவித்துள்ளார். காலை தனது தந்தைக்கு ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ததாகவும், ஆனால் டெலிவரி செய்யும் நபரின் போனை தனது தந்தை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து உடனடியாக தனது நண்பர் ஒருவரிடம் கூறி வீட்டில் தந்தை இருக்கிறாரா என பார்க்க அனுப்பி வைத்துள்ளார். ஆனால் வீட்டில் தனது தந்தையின் போன் மட்டுமே இருப்பதாகவும், தந்தையை காணவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். அத்துடன் பெங்களூரில் இருந்து சென்னை வருவதற்கு இ-பாஸ் பெற விண்ணபித்ததாகவும், ஆனால் தனது கோரிக்கை ஏற்கப்படவில்லை எனவும் தெரிவித்து உதவி கோரி ட்விட்டரில் பதிவிட்டுருந்தார்.
Need Help!!!!! THREAD
My dad, 63, is living alone in Chennai while I’m in Bangalore. He didn’t pick my call yesterday evening, thought he was fast asleep. 1/n
— Karthiknarayanan (@vskn0699) May 30, 2020
இதைப் பார்த்த சிலர் கார்த்திக் நாராயணன் சென்னைக்கு வர உதவியுள்ளார். இதனை அடுத்து தற்போது தனது தந்தையை தேடிக்கொண்டு இருப்பதாகவும், அவர் குறித்த தகவல் யாருக்காவது தெரிந்தால் தனக்கு தெரியப்படுத்த வேண்டும் என அவரது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
PLEASE HELP!!!!!
My dad is missing for past 2 days. Below image has more details.@chennaipolice_ @police_chennai @PoliceGreater @SylendraBabuIPS @DrMRaviIPS1 @ArunIPSCOP @karthickselvaa @latasrinivasan @SunTVMagazine @Mugilan__C pic.twitter.com/i0gjhx434Y
— Karthiknarayanan (@vskn0699) May 31, 2020