'அவங்க என்ன அடிச்சு டார்ச்சர் பண்றங்கம்மா...' 'ஒழுங்கா உங்க வீட்ல இருந்து வரதட்சணை வாங்கிட்டு வா...' கணவன் குடும்பம் சேர்ந்து செய்த கொடூரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 20, 2020 06:26 PM

வரதட்சணை கேட்டு, திருமணம் ஆகி 8 மாதமே ஆன பட்டதாரி இளம்பெண்ணை கணவரின் குடும்பத்தார்  அடித்து கொலை செய்த சம்பவம் திருவண்ணாமலை பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Hanging, beating, killing a husband and family asking for dowry

கடந்த 14.6.2019 அன்று திருவண்ணாமலை மாவட்டம், எர்ணாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை - பத்மா தம்பதிகளின்  மகனுக்கும், அத்திமூர் மதுரா தம்புகொட்டான்பாறையை சேர்ந்த சிவரஞ்சினி Bsc என்ற பட்டதாரி பெண்ணிற்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.

திருமணம் ஆகி சில மாதங்கள் வரை சிவரஞ்சனியின் கணவர், மாமனார் மற்றும் மாமியார் அனைவரும் சிவரஞ்சனியிடம் நல்லவர்கள் போல் நடித்துள்ளனர். மூன்று நான்கு மாதங்களுக்கு பின் சிவரஞ்சனியிடம் வரதட்சணை கேட்டு தங்களின் உண்மையான முகத்தை காட்டத்தொடங்கியுள்ளனர் மாப்பிளை வீட்டார்.

மேலும் சிவரஞ்சினியின் வீட்டிலிருந்து பணம் கொண்டு வர சொல்லி அடித்து துன்புறுத்தி உள்ளனர். கொடுமைகளை பொறுத்து கொள்ள முடியாத சிவரஞ்சனி நடந்த எல்லாவற்றையும்  தனது பெற்றோரிடமும் கூறியுள்ளார்.

இது தொடர் கதையாக இருந்த சூழலில் சிவரஞ்சனியின்  மாமனார், மாமியார், கணவன் என்று ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து சிவரஞ்சனியை  கடந்த புதன் கிழமை (18.3.2020) அன்று இரவு அடித்து தூக்கில் தொங்கவிட்டதாகக் கூறப்படுகிறது. கொலை சம்பவத்தில் இருந்து தப்பிக்க மூவரும் தலைமறைவாகி உள்ளனர்.

கொலை பற்றிய தகவல் அறிந்த போலீசார் சிவரஞ்சனியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மகளை பிரிந்த நிலையில் உள்ள பெற்றோர் கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வரதட்சணை கேட்டு சிவரஞ்சனி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வரதட்சணை தடைச்சட்டத்தின்படி இந்தியாவில் வரதட்சணை வாங்குவது மற்றும் கொடுப்பது 1961லிருந்து தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த குற்றத்திற்கு 10,000 முதல் 15,000 ரூபாய் அபராதமும்,  3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் குற்றத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்படும் என்பது அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

Tags : #DOWRI