‘15,000 பேருக்கு கட்டாய லீவ்’.. 6,000 பேர் ‘பணிநீக்கம்’.. ஊழியர்களுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த நிறுவனத்தின் CEO..!
முகப்பு > செய்திகள் > வணிகம்மிகப்பெரிய விமான நிறுவனமான குவாண்டஸ் (Qantas) 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக உலகமெங்கும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் உலகில் உள்ள பெரு நிறுவனங்கள் பலவும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான குவான்டஸ். ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) ஆலன் ஜோய்ஸ், 15,000 ஊழியர்களுக்கு இந்த ஆண்டு இறுதி வரை கட்டாய விடுப்பு அளிக்க உள்ளதாகவும், 6000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பை நிறுவனம் சந்தித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். மேலும் ஒரு வருடத்துக்கு 100 விமானங்களை இயக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
