'நீண்ட' போராட்டத்துக்கு பின்... மகாராஷ்டிராவுக்கு கிடைத்த 'தித்திப்பு'... இனிமே நல்ல காலம் தான்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் நுழைவுவாயிலாக இருந்த மும்பை தற்போது கொரோனாவின் ஹாட் ஸ்பாட்டாக திகழ்கிறது. கொரோனா அதிகம் பாதித்த இந்திய மாநிலங்களில் மஹாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
இதுவரை மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் சுமார் 1,47,741 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். குறிப்பாக இன்று மட்டும் அங்கு 4841 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 192 பேர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 6,931 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 3661 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 77,543 ஆக உயர்ந்து இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் கொரோனா பிடியில் இருந்து மஹாராஷ்டிரா மீண்டெழும் என்ற நம்பிக்கை துளிர்த்துள்ளது.