"கதையே இனிமேதான் தொடங்குது!".. ஆடிப்போன நாடு .. ஷாக் கொடுத்த மருத்துவர்கள் குழு!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் கொரோனா பரவலின் இரண்டாம் அலைதான் உண்மையான ஆபத்து என்று மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக பிரிட்டனின் அரசியல் தலைவர்களுக்கு மருத்துவ நிபுணர் குழு எழுதியுள்ள கடிதத்தில் பிரிட்டனில் கொரோனாவின் எதிர்காலத்தை கணிக்க முடியாத அளவில் உள்ளதாகவும், தற்போதைய சூழலில் பிரிட்டனில் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் உண்மையாகவே ஆபத்தாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை இப்போதே செய்ய வேண்டியதன் அவசியத்தையும் மருத்துவ நிபுணர் குழ அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, அடுத்த மாத தொடக்கத்தில் விடுதிகள் மற்றும் ஓட்டல்கள் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் மருத்துவ நிபுணர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்
