"இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா!".. சென்னையில் மட்டும் 47,000-ஐ கடந்தது! இன்றைய முழு விபரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவாக தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 2,236 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுமுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,999ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப்பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 29 பேர், தனியார் மருத்துவமனையில் 16 பேர் என 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்
