கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று மீண்டும் அவருக்குத் தீவிர காய்ச்சல் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதை அவரது மகனும் நடிகருமான விஜய் வசந்த் உறுதிப்படுத்தி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக வசந்தகுமார் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல் மருந்துகளை ஏற்றுக் கொள்ளும் நிலையிலிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
