'ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் அறிவிப்பு'...'பதறி துடித்து போன வாடிக்கையாளர்கள்'...நடந்தது என்ன ?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Oct 17, 2019 04:35 PM

ஹெச்.டி.எஃப்.சி வங்கி பாஸ்புக் பக்கத்தின் நகல் ஒன்று கடந்த சில நாட்களாக வைரலாக பரவி வந்தது. இதனை கண்ட அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அதற்கு காரணம் அதில் அச்சிடப்பட்டிருந்த ரப்பர் ஸ்டாம்ப் வாசகம் தான்.

Stamping in Passbook as per circular HDFC bank clarifies

அந்த  ரப்பர் ஸ்டாம்ப் வாசகத்தில் `வங்கியின் டெபாசிட்டுகள் அனைத்தும் டி.ஐ.சி.ஜி.சி (Deposit Insurance and Credit Guarantee Corporation) நிறுவனத்தின் காப்பீட்டில் உள்ளன. இந்த வங்கியில் ஏதேனும் நிதிச்சிக்கல் ஏற்பட்டால், அனைத்து டெபாசிட்தாரர்களுக்கும் டி.ஐ.சி.ஜி.சி நிறுவனமே செட்டில்மென்ட் செய்யும். நிதிச்சிக்கல் ஏற்பட்டதிலிருந்து இரண்டு மாத காலத்துக்குள் ஒவ்வொரு டெபாசிட்தாரர்களுக்கும் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய்வரை காப்பீட்டுத்தொகை வழங்கப்படும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வாசகம் வைரலானதையடுத்து அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இந்த விவகாரம் ஹெச்.டி.எஃப்.சி வங்கி அதிகாரிகளின் பார்வைக்கு சென்றதையடுத்து, அவர்கள் சார்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ''2017, ஜூன் 22-ம் தேதி டெபாசிட்டுக்கான இன்ஷூரன்ஸ் கவரேஜ் குறித்து ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.

அந்த சுற்றறிக்கையில், அனைத்து வணிக வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், பேமன்ட் வங்கிகள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிக்கான டெபாசிட் இன்ஷூரன்ஸ் கவரேஜ் குறித்து பாஸ்புக்கின் முதல் பக்கத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.''

இதன் அடிப்படையில் தான் டெபாசிட்டுகளுக்கான பாஸ்புக்கிலேயே இன்ஷூரன்ஸ் கவரேஜ் குறித்து பிரின்ட் செய்யப்பட்டுள்ளது. அப்படி பிரின்ட் செய்யப்படாத பாஸ்புக்குகளில் மட்டும் ரப்பர் ஸ்டாம்ப் அடிக்கப்பட்டுள்ளதாக வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வங்கி திவாலாகும் பட்சத்தில் அதில் ஒருவர் எவ்வளவு டெபாசிட் செய்திருந்தாலும், வடிக்கையாளர்களால் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய்வரை மட்டுமே எடுக்க முடியும். இது முன்பே உள்ள விதிமுறை என்றாலும், அதை தற்போது பாஸ்புக்கில் வெளிப்படையாக பிரின்ட் செய்திருப்பது ஏன் என்பது தான் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கலந்த குழப்பமாக உள்ளது.

Tags : #HDFC #BANK #STAMPING #PASSBOOK #RBI