வங்கிகள் இயங்கும் நேரத்தில் அதிரடி மாற்றங்கள்..! விவரம் உள்ளே..!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Selvakumar | Oct 01, 2019 04:45 PM

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் பணி நேரத்தை மாற்றி நிதிச்சேவை துறை அறித்துள்ளது.

All public sector banks to operate from 10 am to 4 pm

சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள பல பொதுத்துறை வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டன. அதனால் இந்த வங்கிகள் அனைத்திற்கும் பணி நேரம் பொதுவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக பல வங்கிகள் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் தங்களது வசதிக்கேற்ப பணி நேரத்தை கடைபிடித்து வந்தன. அதனால் பொதுத்துறை வங்கிகள் அனைத்திற்கும் பொதுவான வேலை நேரத்தை நிதிச்சேவை துறை கொண்டு வந்துள்ளது. இது இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அமலாக்கப்பட்டுள்ள புதிய நேர முறையின் அடிப்படையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணியுடன் பணி நேரம் முடிகிறது. உணவு இடைவேளை மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாகலாந்து மாநிலத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை எனவும், மத்தியப்பிரதேசத்தில் காலை 10:30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #BANK #UNIFORMTIMINGS