118 படம் தயாரித்த சேலம் மாடர்ன்ஸ் தியேட்டர் முன் செல்ஃபி எடுத்த முதல்வர்.. வைரல் பதிவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலத்தில் கள ஆய்வின்போது ஆர்வத்துடன் தமிழக முதல்வர் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | துருக்கியை தொடர்ந்து நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. கலக்கத்தில் பொதுமக்கள்..!
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் சமீபத்தில் 'கள ஆய்வில் முதல்வர்' எனும் திட்டத்தை துவங்கினார். அதன்படி மாவட்டவாரியாக பயணம் மேற்கொண்டு நடைபெற்று வரும் அரசு திட்டங்களை பார்வையிட்டும் மற்றும் மாவட்ட அதிகாரிகளை சந்தித்தும் வருகிறார். முதல்கட்டமாக வேலூருக்கு கள ஆய்வுக்காக முதல்வர் முக.ஸ்டாலின் சென்றிருந்தார். அப்போது பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த அரசு பணிகளை பார்வையிட்டதுடன் முதல்வரின் காலை சிற்றுண்டி வழங்கப்படும் பள்ளிகளுக்கு சென்று ஆய்வும் மேற்கொண்டார். அதன் பிறகு சென்னை திரும்பிய முதல்வர் தற்போது இரண்டாம் கட்டமாக சேலம் மாவட்டத்திற்கு ஆய்வுக்காக சென்றிருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த முறை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஆய்வுகளை தொடர்ந்து வருகிறார் முதல்வர். இந்த பயணத்தில் ஓமலூர் - மேட்டூர் பிரதான சாலையில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வில் முதல்வர் ஈடுபட்டார். அப்போது, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து, தாலுகா அலுவலகத்திற்கு சென்ற முதல்வர் மனு அளிப்பதற்காக காத்திருந்த பொதுமக்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
இந்த சூழ்நிலையில் சேலத்தில் உள்ள மாடர்ன் தியேட்டர் நுழைவு வாயில் வழியாக சென்ற முதல்வர் ஸ்டாலின் திடீரென வாகனத்தை நிறுத்தி கீழிறங்கி செல்பி எடுத்துக்கொண்டார். மாடர்ன் தியேட்டர்ஸ் முகப்பு நுழைவு வாயிலின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் அதனை ஆர்வத்துடன் முதல்வர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
Images are subject to © copyright to their respective owners.
இதுகுறித்து முதல்வர் முக.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில்,"சேலம் கள ஆய்வின்போது வழியில் மார்டன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலைப் பார்த்ததும் வாகனத்தை நிறுத்தச் சொன்னேன். T.R.சுந்தரம் அவர்கள் உருவாக்கிய நாற்றங்கால்; திராவிட இயக்கக் கலைஞர்களின் தொட்டில், முத்தமிழறிஞர் கலைஞரின் பேனா முனை தீட்டிய கூர்மிகு வசனங்களின் பிறப்பிடமான அந்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்- இன் நுழைவு வாயிலைப் படம் பிடித்தேன். 9 மொழிகளில் 118 படங்களைத் தயாரித்து அழியாக் கலைப்படங்களை உருவாக்கிய அந்நிறுவனத்தின் இந்த நுழைவு வாயில், பல நினைவுகளைச் சுமந்து நிற்கும் பெருஞ்சுவர்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
T.R.சுந்தரம் அவர்கள் உருவாக்கிய நாற்றங்கால்; திராவிட இயக்கக் கலைஞர்களின் தொட்டில், முத்தமிழறிஞர் கலைஞரின் பேனா முனை தீட்டிய கூர்மிகு வசனங்களின் பிறப்பிடமான #SalemModernTheatres-இன் நுழைவு வாயிலைப் படம் பிடித்தேன்.
திரையுலகின் பல நினைவுகளைச் சுமந்து நிற்கும் பெருஞ்சுவர்! pic.twitter.com/MWrIBgSouZ
— M.K.Stalin (@mkstalin) February 15, 2023
Also Read | "காதலர் தின வாழ்த்துக்கள்".. ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்பா & மார்க்கஸ் ஸ்டோய்னஸ்-ன் வைரல் PIC..!