கையில் பேனரோட திருமண ஜோடியை வழிமறிச்ச 7 பெண்கள்.. "மாப்பிள்ளை முகம் எல்லாம் வேர்த்து போச்சு"!!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் திருமண நிகழ்வு ஒன்றில் பெண்கள் 7 பேர் கட் அவுட்டுடன் கலந்து கொண்ட சூழலில் பின்னர் தெரிய வந்த காரணம் தற்போது அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "சுத்தி போடணும்யா".. 128 மணி நேரம் கழித்து மீட்கப்பட்ட குழந்தை.. உலகையே வென்ற மழலையின் சிரிப்பு!!
சீனாவின் யுனான் என்னும் மாகாணத்தை சேர்ந்தவர் சென். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருமணம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மிகவும் பிரம்மாண்டமாகவும் இந்த திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த சூழலில், திருமணத்திற்காகவும் மணமக்கள் தயாரானதாக சொல்லப்படுகிறது.
ஆனால், இந்த திருமணத்திற்கு நடுவே ஒரு எதிர்பாராத சம்பவமும் அங்கே அரங்கேறி உள்ளது. திடீரென 7 பெண்கள் கையில் ஒரு கட் அவுட் கொண்டு அங்கே சென்றுள்ளனர். இது தொடர்பாக அந்த பெண்களிடம் என்னவென காரணத்தை கேட்ட போது அவர்கள் சொன்ன தகவல் அங்கிருந்த அனைவரையுமே ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதாவது அந்த ஏழு பேருமே தற்போது திருமணம் ஆக இருந்த இளைஞரின் முன்னாள் காதலிகள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த திருமணம் நடந்தால் அதற்கு எதிராக இருப்போம் என்றும் மாப்பிள்ளை சென் எங்கள் வாழ்க்கையில் விளையாடி விட்டார் என்று கடுமையாக அந்த பெண்கள் கோஷமிட்டு கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, திருமண நிகழ்வும் களேபரம் ஆனது.
முதலில் அங்கிருந்தவர்கள் சிலர் இதனை நம்பாத சூழலில், இது பற்றி உண்மை என்னவென்று விசாரித்த போது அவர்கள் அனைவருமே மணமகன் சென்னின் காதலிகள் என்பதும் உறுதியாகி உள்ளது. மேலும் இந்த விஷயத்தை தன்னுடைய வருங்கால மனைவியிடம் கூட மாப்பிள்ளை சென் தெரிவிக்காத சூழலில் தன்னால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களிடம் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றது. இளம் வயதில் தெரியாமல் தவறு செய்து விட்டதாகவும் பெண்கள் மனதை காயப்படுத்தியதாகவும் மன்னிப்பு கேட்டுக் கொண்ட சூழலில், அவர்களை ஏன் சென் பிரிந்து சென்றார் என்பது பற்றிய காரணமும் சரிவர தெரிய வில்லை என தகவல்கள் கூறுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் செய்திகள் பெரிய அளவில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் சூழலில், இதுகுறித்து இணையவாசிகள் பலரும் பலவிதமான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.