ஊரடங்கு தளர்வில் ‘டாஸ்மாக்’ கடைக்கு அனுமதி ஏன்..? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு தளர்வுகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்புகள் அதிகமாக இருந்தது. இதனால் கடந்த மே 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் ஊரடங்கு சமயத்தில் மக்கள் பலர் அவசியம் இல்லாமல் வெளியில் சுற்றி வந்தனர். இதனால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பரவல் சற்று அதிகமாக காணப்படுகிறது. அதனால் அந்த மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதில் கொரோனா பரவல் குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரமாக இருந்தது. அது 60 ஆயிரத்தை தொடும் என்றார்கள், அதனை தடுத்துள்ளோம். திமுக ஆட்சியில் கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது. அதிகளவில் தடுப்பூசிகளை வழங்குமாறு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.
கொரோனா பரவல் குறைந்து வருவதை கவனத்தில் கொண்டு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் டாஸ்மாக் திறப்பு. கொரோனா பரவலை முற்றிலும் தடுக்க ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம் கெஞ்சிக் கேட்டுகொள்கிறேன்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.