தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு!.. தளர்வுகள் என்ன?.. எவை இயங்கும்? எவை இயங்காது?.. முழு விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஜூன் 7ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு அமலுக்கு வருகிறது.
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
11 மாவட்டங்கள் தவிர, எஞ்சிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
ஊரடங்கில் வரவிருக்கும் தளர்வுகள்
மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.
காய்கறி, பழங்கள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
மீன்சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டுமே அனுமதிக்கப்படும்.
இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டுமே அனுமதிக்கப்படும்.
அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளொன்றுக்கு 50 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டு பத்திரப்பதிவு நடத்த அனுமதி.
தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தவிர எஞ்சிய மாவட்டங்களில் மேலும் தளர்வுகள் அறிவிப்பு.
வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு (HouseKeeping) உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதி.
எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், தச்சர், கணினி பழுதுநீக்குவோர் உள்ளிட்ட சுய தொழில் புரிவோருக்கு இ-பதிவுடன் அனுமதி.
எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், தச்சர், கணினி பழுதுநீக்குவோர் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
எலக்ட்ரிகல் பொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
மிதிவண்டி, மோட்டார் சைக்கிள் பழுது நீக்கும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
ஹார்டுவேர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
வாகனங்களில் உதிரிபாக விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
கல்வி புத்தகங்கள், எழுதுபொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
வாகன விநியோகிப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
வாடகை வாகனங்கள், டாக்சிகள், மற்றும் ஆட்டோக்கள் இ-பதிவுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
வாடகை டாக்சிகளில் ஓட்டுநர் தவிர 3 பேர் பயணிக்க மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும்.
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்கு பயணிக்க இ-பாஸ் தேவை.