'இன்னும் தீவிரப்படுத்தணும்'... 'இந்த 6 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையவில்லை'... முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்6 மாவட்டங்களில் மருத்துவ கட்டமைப்பை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் இரண்டாவது அலை மக்களைப் பாடாய்ப் படுத்தி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த ஆறு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக, முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களுடன் விவாதித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நோய் பரவல் அதிகம் உள்ள பகுதிகளைக் கண்காணித்து, அப்பகுதிகளில் போதிய பரிசோதனையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், மற்ற நான்கு மாவட்டங்களில் 18முதல் 44வயதுடைய அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்திடச் செய்ய வேண்டும் எனவும் ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
