'சரி'ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க... 'நாங்க' ரெடியா இருக்கோம்... 'ஐ.பி.எல்' நடத்த விருப்பம் தெரிவித்த 'நாடு'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா வைரசைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் தள்ளிப் போனது.

இதனையடுத்து ஐ.பி.எல் போட்டிகள் செப்டம்பர் மாதத்திற்கு நடைபெறலாம் என்றும், வேறு நாடுகளில் வைத்து நடைபெறலாம் என்றும் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், ஊரடங்கு உத்தரவால் ஐ.பி.எல் போட்டிகள் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது என்றும், கிரிக்கெட் போட்டிகளை விட மக்களின் நலனே முக்கியம் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இலங்கை கிரிக்கெட் வாரியம் தங்களது நாட்டில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் கிரிக்கெட் வாரிய தலைவர் முபாஷீர் உஸ்மானி அளித்த பேட்டியில், 'நாங்கள் பல்வேறு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தியுள்ளோம். இங்குள்ள மைதானங்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு பொதுவான இடமாக இருக்கிறது. அதனால் நாங்கள் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த தயாராகவுள்ளோம்' என தெரிவித்தார்.
இதுகுறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தெரிவிக்கையில், 'ஐ.பி.எல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச அளவில் எங்கும் பயணம் செய்ய முடியாது' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
