VIDEO: சுத்தி 'சுத்தி' வந்தீங்க... சுத்திப்பார்ரா சுத்திப்பாரு... 'சென்னை'யின் பிரபல மேம்பாலத்தை... 'மீம்' போட்டு பங்கமாய் 'கலாய்க்கும்' நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையின் பிரபல மேம்பாலங்களில் ஒன்றான கத்திப்பாரா மேம்பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய மேம்பாலங்களில் ஒன்றாகும். ஆலந்தூரில் அமைந்திருக்கும் இந்த மேம்பாலம் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கட்டப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

அடேய் போதும்டா 😂😂 pic.twitter.com/GSDL2FsaWb
— முகிலன் ™ (@MJ_twets) January 25, 2020
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போன கத்திப்பாரா மேம்பாலத்தை நெட்டிசன்கள் தற்போது மீம் வடிவில் வீடியோ போட்டு கலாய்த்து வருகின்றனர். அதில் 'பிரண்ட்ஸ்' படத்தில் வடிவேலு அரிவாளை தூக்கிக்கொண்டு விஜய், சூர்யா இருவரையும் துரத்தும் வீடியோ கத்திப்பாராவை சுற்றி வருவதுடன் ஒப்பிட்டு பங்கமாக கிண்டல் செய்து வருகின்றனர். விளைவாக இந்த மீம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags : #VIJAY #SURIYA #MKARUNANIDHI
