10 ஆண்டுக்கு முன்பு கிடைத்த உடல்.. தீவிர விசாரணையில் தெரிய வந்த 53 வருட மர்மம்!!.. கதிகலங்கி போயிடுச்சு!!
முகப்பு > செய்திகள் > உலகம்பத்து வருடங்களுக்கு முன்பு கிடைத்த உடல் யாருடையது என்பது பற்றி போலீசார் சோதனை மேற்கொண்டு வந்த நிலையில், இத்தனை நாட்கள் கழித்து தெரிய வந்துள்ள தகவல், அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.

பென்சில்வேனியா பகுதி அருகே அமைந்துள்ள நிலக்கரி சுரங்க பாதை ஒன்றில் உடல் ஒன்று, கடந்த 2012 ஆம் ஆண்டு கிடைத்துள்ளது.
ஆனால், 10 வருடங்களாக அது யாருடைய உடல் என்பது பற்றிய அடையாளம் தெரியாமல் இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து நடத்தப்பட்ட சோதனைகளில் சிறுமி ஒருவரின் உடல் என்பதும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் பின்னர், 2018 ஆம் ஆண்டில், அப்பகுதியை சுற்றியுள்ள இடங்களில் காணாமல் போன சிறுமிகள் பட்டியலை தயார் செய்து இது தொடர்பாக பென்சில்வேனியா மாநில காவல்துறை விசாரித்து வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர், அவர்களுக்கு கிடைத்த தகவல் கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.கடந்த 1969 ஆம் ஆண்டு காணாமல் போன ஜோன் மேரி என்ற சிறுமியின் உடல் தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
ஜோன் மேரி டைமண்ட் என்ற சிறுமி, தனது 14 வது வயதில், கடந்த 1969 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திடீரென காணமால் போயுள்ளார். முன்னதாக, அருகேயுள்ள பூங்காவிற்கு சென்று வருவதாக வீட்டில் இருந்து கிளம்பி சென்ற ஜோன் மேரி, அதன் பின்னர் வீடு திரும்பவே இல்லை என்றும் கூறப்படுகிறது.
அப்படி ஒரு சூழ்நிலையில் தான், சுமார் 53 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஜோன் மேரி உடல் அடையாளம் காணப்பட்டுள்ள சம்பவம், அவரது குடும்பத்தினர் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
