பாழடைந்த சுரங்கத்துல கண்டுபிடிக்கப்பட்ட ஜீன்ஸ் பேண்ட்.. ஏலத்துல வந்த கடும்போட்டி.. விலைய கேட்டாலே திக்குன்னு இருக்கே.. என்னதான் ஸ்பெஷல் அதுல?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Oct 13, 2022 09:16 PM

மெக்சிகோவில் 1880-களை சேர்ந்த பழங்கால ஜீன்ஸ் ஒன்று தற்போது நம்ப முடியாத விலைக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Levi jeans from the 1880s was auctioned for 76000 USD

Also Read | வானவில் பார்த்திருப்போம் இது புதுசா இருக்கே.. வாக்கிங் போன போட்டோகிராஃபர் வானத்துல பார்த்த காட்சி.. வைரல் Pic -ன் விநோத பின்னணி..!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனம் Levi Strauss & Co. இந்த நிறுவனத்தை லெவி ஸ்ட்ராஸ் (Levi Strauss) என்பவர் கடந்த 1853 ஆம் ஆண்டு துவங்கினார். ஜெர்மனி நாட்டை பூர்வீகமாக கொண்ட லெவி ஸ்ட்ராஸ் பவேரியா மாகாணத்தில் வசித்து வந்தார். அங்கிருந்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்பிரான்ஸிகோ நகரத்தில் குடியேறினார் லெவி ஸ்ட்ராஸ். அப்போது, Levi Strauss & Co எனும் ஆடை தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். அதன்பிறகு இந்த நிறுவனம் உலக அளவில் பிரபலமானது. 

Levi jeans from the 1880s was auctioned for 76000 USD

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் ஜீன்ஸ் பேண்ட் ஒன்று கிடந்ததை சிலர் கண்டுபிடித்திருக்கின்றனர். அதனை Levi Strauss & Co நிறுவனம் துவங்கப்பட்ட சில ஆண்டுகளில் தயாரித்திருக்கிறது. இந்த பேண்ட் மக்களிடையே பிரபலமான நிலையில், அது ஏலத்திற்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

அதாவது 1880 களில் தயாரிக்கப்பட்ட பழமையான ஜீன்ஸ் பேண்ட், தற்போது ஏலத்திற்கு வந்திருக்கிறது. இது நிச்சயம் நல்ல விலைக்கு போகும் என நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். அதன்படி, இந்த ஜீன்ஸ் பேண்ட் 76,000 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 62.5 லட்ச ரூபாய்) விற்பனையாகியுள்ளது. இந்த பேண்டை பழங்கால ஆடை சேகரிப்பு ஆர்வலரான Kyle Haupert மற்றும் Zip Stevenson ஆகியோர் வாங்கியுள்ளனர்.

Levi jeans from the 1880s was auctioned for 76000 USD

இந்நிலையில், Haupert இந்த ஏலத்தில் தாங்கள் வெற்றிபெற்ற தருணத்தை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. Haupert  மற்றும் Stevenson ஆகிய இருவரும் இந்த ஏலத்தின் பிரீமியம் கட்டணத்தையும் சேர்த்து மொத்தம் 87,400 அமெரிக்க டாலர்கள் செலுத்தி இந்த அரிய பேண்டை வாங்கியுள்ளனர். இதனிடையே புகழ்பெற்ற Levi Strauss & Co நிறுவனத்தின் ஆரம்ப கால தயாரிப்புகளில் ஒன்றான இந்த பேண்டின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

Also Read | என் Perfume-அ வாங்குனாத்தான்.. எலான் மஸ்க் வச்ச டிமாண்ட்.. ஒரே ட்வீட்டில் பத்திகிட்ட ட்விட்டர்..!

Tags : #LEVI JEANS #AUCTION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Levi jeans from the 1880s was auctioned for 76000 USD | World News.