'ஃபங்கஷன் முடிஞ்ச உடனே 42 லட்சம் ரூபாய் மாயம்...' 'பணத்தை எடுத்தது வெளிய உள்ள ஆள் இல்ல...' - 4 வயது சிறுவன் மூலம் வெளிவந்த உண்மை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Behindwoods News Bureau | Dec 02, 2020 10:56 PM

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவி தன் கணவருக்கு தெரியாமல் 42 லட்ச ரூபாயை தன் முகநூல் காதலருக்கு கொடுத்த சம்பவம் அவர்களின் மகனால் அம்பலமான நிகழ்வு நடந்துள்ளது.

chennai wife rupees to her 42 lakhs Facebook lover

ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருபவர் சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த தமீம் அன்சாரி. இவருக்கு தன்ஸிம் என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் அன்சாரியின் 4 வயது மகனுக்கும், அவரது தங்கை மகனுக்கும் கடந்த மாதம் 20-ந் தேதி வீட்டில் பிறந்த நாள் விழா கொண்டாடியுள்ளனர். விழா முடிந்த பிறகு இரவு வீட்டில் இருந்த சுமார் 42 லட்ச ரூபாய் காணாமல் போனது கண்டு தமீம் அன்சாரி மற்றும்   அவரின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் தமீம் அன்சாரியின் தங்கை கணவர் கருப்பு நிற பை ஒன்றை எடுத்துச் சென்றதை தனது 4 வயது மகன் பார்த்ததாக அவரது மனைவி தன்ஸிம் உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இதனடிப்படையில் சிறுவனை விசாரிக்க அவனும் தனது மாமா கருப்பு நிற பையை எடுத்துச் சென்றதாக கூறியுள்ளான். இதனால் அவர் தான் பணத்தை திருடியதாக நினைத்து வீட்டிற்குள்ளேயே விசாரணை நடத்தியுள்ளனர். பின் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீஸ் விசாரணையில், தொழிலதிபர் வீட்டில் அந்த வாரம் முதல் சிசிடிவி கேமராவும் இயங்கவில்லை என்ற செய்தி வெளிவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், நேரில் பார்த்ததாக சாட்சி சொன்ன தன்ஸிமின் 4 வயது மகனை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது சிறுவன் "தனது மாமா தான் திருடினார்" என அம்மா அனைவரிடமும் சொல்ல சொன்னதாக உண்மையகூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் தொழிலதிபரின் மனைவி தன்ஸிம் போலீசார் விசாரிக்க தொடங்கி, அவரது செல்போனை ஆய்வு செய்ததில் புரசைவாக்கத்தைச் சேர்ந்த முகமது ரியாஸ் என்பவர் அடிக்கடி பேசி வந்ததை கண்டுபிடித்து அவரை பிடித்து விசாரித்தனர். ரியாஸ், தொழிலதிபரின் மனைவி தன்ஸிமிற்கு முக நூல் மூலம் அறிமுகமாகி காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. தமீம் அன்சாரி அடிக்கடி வியாபாரம் தொடர்பாக வெளியூர் சென்று விடுவதால், தன்ஸிம், ரியாஸ் இடையே தவறான தொடர்பு ஏற்பட்டு பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

மேலும், தனது மகனின் பிறந்த நாள் விழா வர, அதற்கு முன்பு வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் திட்டமிட்டு பழுதை ஏற்படுத்தியுள்ளார். பிறந்த நாள் விழாவிற்கு முதல் நாளே பணத்தை எடுத்து ரியாஸிடம் கொடுத்து விட்டு, மறுநாள் பணம் உறவினரால் திருட்டு போனதாக நாடகமாடியுள்ளார். இந்நிலையில் ரியாஸுடம் இருந்து 42 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த பட்டினப்பாக்கம் போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai wife rupees to her 42 lakhs Facebook lover | Tamil Nadu News.