“TIRAMAI”: சென்னையைச் சேர்ந்த பிரபல ஸ்போர்ட்ஸ் கிளப், THROTTLE SPORTZ WORLD, வழங்கும் 50% முதல் 100% வரையில் SCHOLARSHIPS - விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பல்வேறு விளையாட்டுகளில் சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வருகிறது சென்னையைச் சேர்ந்த பிரபல ஸ்போர்ட்ஸ் கிளப் Throttle Sportz World நிறுவனம். தற்போது, வெற்றிகரமான தனது 3-ஆம் ஆண்டை நிறைவு செய்திருக்கிறது, Throttle Sportz World!

அழகான இந்த தருணத்தில, இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு விதத்திலும் தங்களது பங்காற்றிய அத்தனை பேருக்கும் தனது நன்றியை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது, Throttle Sportz World!
இந்த நாளில் “TIRAMAI” என்கிற மிக அருமையானதொரு திட்டத்தை துவக்க இருக்கிறது இந்நிறுவனம். இந்த திட்டத்தின் மூலம், நிறுவனத்திற்கு வரும் லாபத்தில் 10% நிதியை கொண்டு, திறமையான ஏழை எளிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நல்வாய்ப்புகள் கிடைக்கப்பெறாமல் ஏழ்மை நிலையில் உள்ள பல்வேறு திறமைகளை அங்கீகரித்து அவர்களுக்கு “TIRAMAI” திட்டத்தின் மூலம் 50% முதல் 100% வரையில் Scholarships வழங்கவும் முடிவு செய்திருக்கிறது, Throttle Sportz World. இத்திட்டம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
இந்த நேரத்தில், எங்களின் இந்த முயற்சி பெருவெற்றி பெற்றிட அனைத்து நல்ல உள்ளங்களும் தங்களால் முடிந்த அளவு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

மற்ற செய்திகள்
