போதையில் செய்த 'திருட்டு',,.. "திருடப் போன 'வீட்டு'ல,,.. கண்டுபிடிக்க 'க்ளூ' குடுத்துட்டு வந்துருக்காங்க... வசமாக சிக்கிய 'திருடர்கள்'... நடந்தது 'என்ன'??..
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை சோழிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சவுந்தர்ராஜன். இவர் சில தினங்களுக்கு தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான ஆரணி சென்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதியன்று, சவுந்தர்ராஜன் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் சவுந்தர்ராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, வீட்டிற்கு வந்து பார்த்த சவுந்தர்ராஜனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவரது வீட்டில் இருந்த டிவி, நகை, லேப்டாப், பைக் உட்பட பல பொருட்கள் திருட்டு போயிருந்தன. இந்த திருட்டுச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்து போலீசார் திருட்டு நடந்த வீட்டை ஆய்வு செய்தனர். அப்போது திருடன் தனது ஒற்றைக் கால் செருப்பை அங்கு விட்டுச் சென்றுள்ளார். தொடர்ந்து, விஷ்ணு என்ற பெயரையும் சுவற்றில் எழுதிச் சென்றுள்ளதாக சவுந்தர்ராஜன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனிப்படை வாகன சோதனை நடத்திய போது, ஆக்டிவா பைக் ஒன்றில் வந்த நபரை மடக்கிப் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது மதன் என்ற அந்த நபர், முன்னுக்குப் பின் முரணாக பேசிய மதன், தான் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டுள்ளார். சம்பவ தினத்தன்று தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அதிக அளவில் மது குடிக்க பணம் இல்லாத நிலையில், சவுந்தர்ராஜன் வீடு பூட்டியிருப்பதைக் கண்ட மதன் மற்றும் அவரது நண்பர் உள்ளே சென்று திருடியுள்ளனர்.
போதையில், மதன் தனது மகன் விஷ்ணு பெயரை சவுந்தர்ராஜன் வீட்டில் எழுதிய நிலையில் தனது ஒற்றைக் கால் செருப்பை அங்கு விட்டு வந்துள்ளார். தொடர்ந்து, அங்கு திருடிய ஆக்டிவா பைக்கில் இருந்த ஸ்டிக்கரை மாற்றி விட்டு தனது மகன் விஷ்ணுவின் பெயரை மதன் ஒட்டியுள்ளார். தான் திருடியதை மதன் ஒப்புக் கொண்ட நிலையில், மதன் மற்றும் அவரது நண்பரை கைது செய்து போலீஸ் விசாரித்து வருகின்றனர்.