“புகழப்படாத ஹீரோக்கள்”.. IPL இவ்ளோ சிறப்பா நடக்க காரணமே இவங்கதான்.. பிசிசிஐ அசத்தல் அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் மைதான பராமரிப்பாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Also Read | ‘இது அப்படியே தோனி ஸ்டைல்’.. ஹர்திக் கேப்டன்ஷி பற்றி முன்னாள் வீரர் சொன்ன ‘சூப்பர்’ தகவல்..!
இந்தியாவில் நடைபெற்ற 15-வது சீசன் ஐபிஎல் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை அடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் முதல் முறையாக மைதான பராமரிப்பாளர்களுக்கு பிசிசிஐ ஊக்கத்தொகை வழங்குகிறது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், ‘ஐபிஎல் 2022 தொடரில் சிறப்பான விளையாட்டை நமக்கு அளிக்க பெரும் உதவியாக இருந்த புகழப்படாத ஹீரோக்களான கியூரேட்டர்கள் மற்றும் கிரவுண்ட்ஸ்மேன்களுக்கு ரூ. 1.25 கோடி பரிசுத் தொகை வழங்குவதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன். ஐபிஎல் தொடர் முழுவதும் நடைபெற்ற 6 மைதானங்களை சேர்ந்தவர்களுக்கும் இந்தப் பரிசுத்தொகை பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது. சிறந்த ஆட்டங்களை நாம் அனுபவிப்பதற்காக தங்களது கடின உழைப்பை அவர்கள் கொடுத்துள்ளனர்’ என ஜெய் ஷா குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசன் முழுவதும் மும்பை மற்றும் புனே ஆகிய இரண்டு நகரங்களில் மொத்த லீக் போட்டிகளையும் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி மும்பையில் உள்ள வான்கடே, பார்போர்ன், டிஒய் பாட்டில் ஆகிய மைதானங்களிலும், புனே எம்சிஏ மைதானத்திலும் என மொத்த நான்கு மைதானங்களில் லீக் போட்டிகள் அனைத்தும் நடைபெற்றன.
இதனை அடுத்து ப்ளே ஆஃப் மற்றும் இறுதிபோட்டிகளில் குவாலிஃபயர் 1, எலிமினேட்டர் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெற்றது. அதில் பார்போர்ன், வான்கடே, டிஒய் பாட்டீல் மற்றும் எம்சிஏ ஆகிய மைதானங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், ஈடன் கார்டன்ஸ் மற்றும் அகமதாபாத் மைதானங்களுக்கு தலா ரூ.12.5 லட்சமும் பரிசுத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
