"ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்" .. தமிழ்நாடு தொழில்நுட்ப ஹப் திட்டத்திற்கு காவேரி மருத்துவமனை பங்களிப்பு.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Mar 03, 2023 12:28 PM

சென்னை, 2 மார்ச் 2023: தமிழ்நாட்டின் முன்னணி பல-சிறப்பு-சுகாதார தொடர் மருத்துவமனைகளுள் ஒன்றான காவேரி மருத்துவமனை, தமிழ்நாடு தொழில்நுட்ப ஹப் திட்டத்திற்கு தனது பங்களிப்பு வழங்கப்படுவதை அறிவித்திருக்கிறது.  தமிழ்நாடு அரசின் iTNT என்ற இந்த அமைப்பு, புத்தாக்கத்தை ஊக்குவிக்கவும், உலகின் மீது நேர்மறை தாக்கத்தை உருவாக்க வேண்டுமென்ற குறிக்கோளோடும், அரசின் ஆதரவோடு தொழில்முனைவோர்கள், புதிய சிந்தனையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறையோடு இணைந்து பல்வேறு சூழல் அமைப்புகளில் செயல்படுகிறது.  ஐந்து ஆண்டுகள் காலஅளவில் காவேரி மருத்துவமனை குழுமம் ரூ.75 இலட்சம் என்ற தொகையை இத்திட்டத்திற்கு வழங்கும். 

Kauvery Hospital contributes Rs 75 lakh to iTNT hub

இம்மருத்துவமனையின் நிதி பங்களிப்பிற்கான முதல்கட்டத் தொகையை தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜிடம் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் வழங்கினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கனவாக ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை உயர்த்தும் திட்டம் இருக்கிறது.  இந்த மாபெரும் கனவை நிஜமாக்குவதற்காகவும் மற்றும் தமிழ்நாட்டில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வழியாக, வளர்ந்து வரும் மற்றும் ஆழ்நிலை தொழில்நுட்ப (Deeptech) புத்தாக்கங்களை சாத்தியமாக்குவதற்கும் இந்த முன்னெடுப்பின் வழியாக காவேரி மருத்துவமனை பங்களிப்பை வழங்கும்.  தற்போது தமிழ்நாடு மாநிலத்தில் 300-க்கும் அதிகமான ஆழ்நிலை தொழில்நுட்ப ஸ்டார்ட்- அப் நிறுவனங்கள்  இயங்கி வருகின்றன. 

இந்திய நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் தொழில் நிறுவனங்களை கொண்ட மாநிலம் என புகழ்பெற்றிருக்கும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் தமிழ்நாடு டெக்னாலஜி ஹப் அமைந்திருக்கிறது.  வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் ஆழ்நிலை தொழில்நுட்பங்கள் ஆகிய பிரிவுகளில் பணியாற்றி வரும் ஸ்டார்ட் – அப் நிறுவனங்களின் சூழலமைப்பை 570-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளின் கல்விசார் வலையமைப்போடும் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறை பங்காளர்களுடனும் இது இணைக்கிறது.  எதிர்காலத்தின் உலகளாவிய பொருளாதாரத்தை வடிவமைப்பதற்கும் புத்தாக்கத்தை ஊக்குவித்து வளர்ப்பதே இதன் நோக்கமாகும்.

சென்னை காவேரி மருத்துவமனையின் செயலாக்க இயக்குனரும், இதன் இணை நிறுவனருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் இப்பங்களிப்பு செயல்பாடு குறித்து பேசுகையில் கூறும்போது, “iTNT – ல் எமது நிதியளிப்பு செயல்பாடானது, தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பது மீது நாங்கள் கொண்டிருக்கும் எமது பொறுப்புறுதியை பிரதிபலிக்கிறது.  இம்மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் ஸ்டார்ட் – அப் நிறுவனங்களும், புத்தாக்கங்களும் உருவாகி வரும் நிலையில் அவைகளுக்கான ஒரு அடைகாப்பு மையமாகவும் மற்றும் ஸ்டார்ட் -அப்களை கைப்பிடித்து வழிநடத்தும் வழிகாட்டியாகவும் iTNT  திட்டம் செயல்படுகிறது.  தமிழ்நாடு மாநில அரசின் இந்த மாபெரும் தொலைநோக்கு திட்டத்தின் ஒரு அங்கமாக பங்கேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

Tags : #KAUVERY HOSPITAL #ITNT HUB

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kauvery Hospital contributes Rs 75 lakh to iTNT hub | Tamil Nadu News.