சென்னையில் பைக் விபத்தில் உயிரிழந்த 2 இளைஞர்கள்.. விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் குறித்து விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை தலைமை செயலகம் அருகே உள்ள இந்தியன் வங்கி அருகே கார்த்திக் என்பவர் நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் கார்த்திக்கிடம் இருந்து செல்போனை பறித்து விட்டு அதிவேகமாக வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
அப்போது அவர்களது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர்கள் இருவரும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சென்னையில் செல்போனை பறித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும்போது விபத்துக்குள்ளாகி இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

மற்ற செய்திகள்
