விக்கிப்பீடியாவில் 350 திருத்தங்கள்... "சென்னையில் நான் படிச்ச ஸ்கூல் இதாங்க" .. போட்டு உடைத்த 'கூகுள்' சுந்தர் பிச்சை..!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Madhavan P | May 10, 2022 01:08 PM

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள சுந்தர் பிச்சை, தான் சென்னையில் படித்த பள்ளி எது என்பதை விளக்கியுள்ளார்.

Google CEO Sundar Pichai reveals the name of school he went

Also Read  | "உண்மையாவே தாஜ்மஹால் உலக அதிசயம் தான்".. எலான் மஸ்க் போட்ட ட்வீட்.. இந்திய தொழிலதிபர் வச்ச வேற லெவல் கோரிக்கை..!

சுந்தர் பிச்சை

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். அதன்பிறகு படிப்படியாக முன்னேறி கடந்த 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்தார். இந்நிலையில், புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுந்தர் பிச்சை சென்னையில் வசித்தபோது தான் படித்த பள்ளி குறித்து பேசியிருக்கிறார்.

Google CEO Sundar Pichai reveals the name of school he went

350 திருத்தங்கள்

கடந்த 2015 ஆம் ஆண்டு கூகுள் CEO-வாக சுந்தர் பிச்சை தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அவருடைய விக்கிபீடியா பக்கத்தில் 350 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதில், அவர் படித்த பள்ளி என பல்வேறு கல்வி நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் அவரிடமே இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சுந்தர் பிச்சை," நான் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வன வாணி பள்ளியில் தான் படித்தேன்" என்றார். மேலும், வீட்டிலிருந்தே பள்ளிக்கல்வியை பயின்றதாக குறிப்பிடப்பட்ட செய்தி பிழையானது எனவும் அவர் விளக்கினார்.

Google CEO Sundar Pichai reveals the name of school he went

கிரிக்கெட் அணி கேப்டன்

அதேபோல, பள்ளிக் காலங்களில் ஸ்கூல் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது பற்றி பேசிய அவர்,"அது தவறான தகவல் என்றும், ஆனால் அப்படி இருக்க (கிரிக்கெட் அணியின் கேப்டனாக) மிகவும் விரும்பியிருக்கிறேன்" என்றும் புன்னகையுடன் பதிலளித்தார்.

கோரக்பூரில் உள்ள ஐஐடியில் மெட்டலர்ஜிகல் எஞ்சினியரிங்கில் பி.டெக்  முடித்த சுந்தர் பிச்சை அதன்பிறகு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மெட்டீரியல் சயன்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர், பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள வார்ட்டன் ஸ்கூல் ஆஃப் யூனிவெர்சிட்டியில்  மேலாண்மை படிப்பை முடித்தார்.

Google CEO Sundar Pichai reveals the name of school he went

வேலை 

துவக்கத்தில், மெக்கின்சி & கம்பெனியில் மேலாண்மை ஆலோசனை பிரிவில் பணிபுரிந்துவந்த சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். ஆல்பபெட் குழுமத்தின் CEO  வாக கடந்த 2019 ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை தேர்ந்தெடுக்கப்பட்டார். கூகுள் நிறுவனம் ஆல்பபெட் குழுமத்தின் கீழ் இயங்கிவரும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் பிச்சை படித்த பள்ளி எது? என்ற சமீப நாட்களாக கேள்வி எழுந்துவந்த நிலையில், அவரே தற்போது உண்மையை வெளியிட்டிருப்பது தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

Tags : #GOOGLE CEO #SUNDAR PICHAI #CHENNAI #சுந்தர் பிச்சை #சென்னை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Google CEO Sundar Pichai reveals the name of school he went | Business News.