வீட்டுக்குள்ள சிவப்பு கலர்ல கறை.. சிசிடிவி கேமராவையும் காணோம்.. ஆடிட்டர் தம்பதிக்கு நேர்ந்த சோகம்.. சென்னையையே அதிர வைத்த பகீர் சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் தொழிலதிபர் மற்றும் அவரது மனைவியை அந்த வீட்டில் பணிபுரிந்த டிரைவரே நகை மற்றும் பணத்துக்காக கொலை செய்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சென்னை மயிலாப்பூர் துவாகர நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 58). தொழிலதிபரான இவர் குஜராத்தில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அனுராதா (53). இவர்களுடைய மகள் சுனந்தா திருமணமாகி அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஸ்ரீகாந்துக்கு மகாபலிபுரத்தில் பண்ணை வீடு ஒன்று உள்ளது.
விபரீதம்
ஸ்ரீகாந்த் - அனுராதா தம்பதியின் மகன் மற்றும் மகள் அமெரிக்காவில் வசித்துவருகின்றனர். அவர்களை காண இருவரும் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்கா சென்றுள்ளனர். இடையில் மார்ச் மாதத்தில் ஸ்ரீகாந்த் மட்டும் இந்தியா வந்துவிட்டு மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது, நில விஷயமாக பணப்பரிவர்த்தனையில் ஸ்ரீகாந்த் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த விஷயத்தை அறிந்த ஸ்ரீகாந்தின் டிரைவர் மதன் லால் கிருஷ்ணன் அந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த மே 7 ஆம் தேதி, கிருஷ்ணன் - அனுராதா தம்பதி இந்தியா திரும்பியுள்ளனர். பெற்றோர் வீடு திரும்பிவிட்டனரா என்பதை அறிய அமெரிக்காவில் இருக்கும் இந்த தம்பதியின் மகள், சுனந்தா ஸ்ரீகாந்துக்கு கால் செய்திருக்கிறார். ஆனால், பலமுறை அழைத்தும் பெற்றோர் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
கறை
சுனந்தா அளித்த தகவலின் அடிப்படையில், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மயிலாப்பூர் காவல்துறையினரை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்க்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். இதனால் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு சென்ற, காவல்துறை அதிகாரிகள் அங்கே ரத்தக் கறை இருந்ததை பார்த்து அதிர்ந்துபோனார்கள். இதனையடுத்து சுனந்தா மூலமாக, கிருஷ்ணனின் போன் நம்பரை வாங்கிய காவல்துறையினர் அந்த எண்ணை டிராக் செய்கையில் அவர் ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியில் இருப்பது தெரியவந்தது.
மடக்கிப்பிடித்த போலீசார்
இதனை அடுத்து, ஆந்திர போலீசாரின் உதவியுடன் கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் ரவி ராய் ஆகிய இருவரையும் தமிழக காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் சேர்ந்து ஸ்ரீகாந்த் - அனுராதா தம்பதியை கொலை செய்துவிட்டு, உடல்களை ஸ்ரீகாந்துக்கு சொந்தமான பண்ணை வீட்டில் புதைத்தது தெரியவந்தது.
ஸ்ரீகாந்தின் வீட்டில் இருந்த 20 லட்சம் பணம், தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை இருவரும் கொள்ளையடிக்கவே, திட்டமிட்டு இந்த கொலைகளை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், சிக்கிக்கொள்ளாமல் இருக்க வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவையும் அவர்கள் திருடிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளுடன் நேபாளம் சென்றுவிட்டால் தங்களை பிடிக்க முடியாது என்று திட்டம் போட்டு இருவரும் செயல்பட்டதாகவும் அதற்கு முன்னரே ஆந்திர மாநில காவல்துறையுடன் இணைந்து இருவரையும் பிடித்துவிட்டதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்திருக்கிறது.
சென்னையில், பணம் மற்றும் நகைக்காக தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8