'செல்போன ஆட்டைய போட வீட்டுக்குள்ள போயிட்டு...' 'பக்கா எவிடன்ஸ் விட்டுட்டு வந்த திருடன்...' - திடீர்னு வந்த போன்கால் தான் அல்டிமேட் ட்விஸ்ட்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருட வந்த இடத்தில் தன் செல்போனை விட்டு சென்ற திருடன் போலிசாருக்கே போன் செய்து தன் பெயரை கூறிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை ஜாபர்கான்பேட்டையில் இருக்கும் ஹோட்டலில் வேலை செய்யும் இளைஞர்கள் 5 பேர் அப்பகுதிலேயே வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் புழுக்கம் தாங்காமல் காற்று வாங்குவதற்காக இரவு கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளனர்.
அந்தசமயம் பார்த்து கதவு திறந்திருந்ததை பார்த்த திருடர்கள் இருவர் வீட்டிற்குள் சென்று உள்ளேயிருந்த 4 செல்போன்களை திருடி உள்ளனர். திருடர்களின் சத்தம் கேட்டு ஹோட்டல் ஊழியர்கள் கண் விழிக்கவே, திருடிய செல்போன்களோடு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் தப்பியோடிய இருவரில் ஒருவன் தனது செல்போனை அங்கு தவறவிட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருடனின் செல்போனை கைப்பற்றி வைத்துள்ளனர். இதையறியாத நண்பனின் செல்போனுக்கு கால் செய்த மற்றொரு திருடன், 'ஆகாஷ் எங்கடா இருக்கே, நான் விஷ்ணு பேசுகிறேன்' எனக் கூறியுள்ளார். மேலும் திருடர்கள் இருவரின் பெயர்களும் தெரியவந்த நிலையில் பழைய குற்றவாளிகளின் பெயர்களைக் கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.