வேலி முழுவதும் பெண்களின் உள்ளாடைகள்… உலகின் விசித்திரமான சுற்றுலாத் தளம்!
முகப்பு > செய்திகள் > உலகம்நியுசிலாந்தில் உள்ள ஒரு சுற்றுலாத் தளத்தில் வேலி ஒன்று நீளமாக அமைக்கப்பட்டு அது முழுவதும் பெண்களின் உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
விசித்திரமான சுற்றுலாத்தளம்:
இந்த உலகத்தில் எப்போதுமே விசித்திரங்களுக்கு பஞ்சமில்லை. அப்படி ஒரு வினோதமான சுற்றுலாத் தளம்தான் நியுசிலாந்து நாட்டின் செண்ட்ரல் ஒடாகா பகுதியில் அமைந்துள்ளது. ப்ரா ட்ரோனா என அழைக்கப்படும் இந்த பகுதியில் வேலி ஒன்று அமைக்கப்பட்டு அது முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்களின் உள்ளாடைகளான பிராக்கள் தொங்கவிடப்பட்டுள்ளன.
எப்போது தொடங்கியது:
நியுசிலாந்தில் உள்ள செண்ட்ரல் ஒடாகா பகுதியில் 1999 ஆம் ஆண்டின் கிறிஸ்துவஸ் வாக்கில் இந்த பகுதியில் அருகில் வசிப்பவர்கள் முதல் முதலாக சில பிராக்கள் அங்கு வேலியில் தொங்குவதைப் பார்த்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல பிராக்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்ல ஆரம்பித்துள்ளது. இடையிடையே திருடர்கள் அங்கிருக்கும் பிராக்களை திருடிச் சென்றுள்ளார். ஆனாலும் அதன்பின்னர் முன்னர் இருந்ததை விட அதிகளவில் பிராக்கள் அங்கு குவிய ஆரம்பித்துள்ளன.
உலகத்தின் கவனம்:
நாட்கள் செல்ல அங்கு இருக்கும் பிராக்களின் எண்ணிக்கை அதிகமாகி வேலி முழுவதும் ஆயிரக்கணக்கில் காணப்பட்டுள்ளன. இப்படி வினோதமான இந்த பிரா வேலி அங்கு வசிக்கும் சிலருக்கு தர்மசங்கடமான நிலைமையையும் உருவாக்கியுள்ளது. இதையடுத்து சிலர் அந்த வேலியை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த நிலத்தின் பாதுகாவலரான ஜான் லீ என்பவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு போக்குவரத்துக்கு தடையாக இருப்பதாக சொல்லி அந்த பகுதியில் இருந்து சுமார் 7400 பிராக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
மார்பக புற்றுநோய் அறக்கட்டளை:
மக்கள் அதிகம் கூடுகின்ற இந்த பகுதி ப்ரா ட்ரோனா என அழைக்கப்பட்டு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள பலகையில் ‘எங்கள் பகுதியை வந்து பார்வையிட்டவர்களுக்கு நன்றி. உங்களால் முடிந்த சிறிய உதவியை நியுசிலாந்து மார்பக புற்றுநோய் அறக்கட்டளை வழங்குங்கள்’ என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நம்பிக்கைகள்:
இப்படி வினோதமான ஒரு சுற்றுலாத்தளமாக இருக்கும் இந்த இடத்துக்கு வரும் பெண் சுற்றுலாப் பயணிகள் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக தங்கள் உள்ளாடைகளை இங்கு விட்டு செல்வதாக சொல்லப்பட்டாலும், வேறு சில காரணமும் சொல்லப்படுகிறது. பெண்ணியவாதிகள் தங்கள் சுதந்திரத்தை வலியுறுத்தும் விதமாக இதை செய்வதாகவும், மற்றும் சிலர் இப்படி செய்தால் தங்கள் மனதுக்கு பிடித்த மாதிரியான காதலர் கிடைப்பார் என்ற நம்பிக்கையில் செய்வதாகவும் சொல்லப்படுகிறது.