'நள்ளிரவில் யாரும் இல்லாத டாய்லெட்டில் கேட்ட FLUSH சத்தம்'... 'திடுக்கிட்டு எழுந்த இளைஞர்'... கதவை திறந்ததும் தூக்கிவாரி போட வைத்த காட்சி!
முகப்பு > செய்திகள் > உலகம்நள்ளிரவில் வீட்டில் இருந்த கழிவறையில் தண்ணீர் தானாக Flush ஆகும் சத்தத்தைக் கேட்டு அங்குச் சென்ற நபருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.

ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் திடீரென வீட்டுக் கழிவறையில் தண்ணீர் தானாக Flush ஆகும் சத்தம் கேட்டது. வீட்டில் வேறு யாரும் இல்லையே பின்னர் எப்படி இந்த சத்தம் வருகிறது எனச் சந்தேகத்தில் கழிவறை கதவைத் திறந்து அந்த இளைஞர் பார்த்துள்ளார்.
அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அந்த கழிவறையில் 6 அடி நீளமுள்ள கொடிய விஷப்பாம்பு கழிப்பறையின் உள்ளே நெளிந்து கொண்டு இருந்தது. இதனைப் பார்த்த அவர் பயத்தில் என்ன செய்வது எனத் தெரியாமல், அவரது உடல் நடுங்க ஆரம்பித்தது. பின்னர் சுதாரித்துக் கொண்ட அந்த இளைஞர், உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் அந்த பாம்பைப் பிடித்துச் சென்று காட்டுக்குள் பத்திரமாக விட்டனர். கழிப்பறையிலிருந்த இரண்டு சுவர்களுக்கு இடையில் பாம்பு நுழைந்து வந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ஆஸ்திரியா நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
