நாடு முழுவதும் 'பச்சை' மண்டல பட்டியலை 'வெளியிட்ட' மத்திய அரசு... 'தமிழகத்தின்' நிலை என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | May 01, 2020 08:18 PM

கொரோனா வைரஸ் காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு மே மாதம் மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில வாரியாக சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டல பகுதிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Central Govt releases the list of Green zone in India

மொத்தமாக இந்தியளவில் 319 பகுதிகள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழகம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் பச்சை மண்டலத்தில் இடம்பெற்றுள்ளது. கொரோனாவின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளன. 284 ஆரஞ்சு மண்டல பகுதிகளில் தமிழகத்தில் இருந்து 24 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

அதே போல கொரோனா வைரஸ் மூலம் அதிகம் பாதிப்புள்ள சிவப்பு மண்டலங்களில் உள்ள மாவட்டங்கள் மொத்தம் 130 ஆகும். தமிழகத்தில் இருந்து சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிபேட்டை, விருதுநகர், திருவாரூர், வேலூர், காஞ்சீபுரம் ஆகிய 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் அதிகம் பாதிப்புள்ள மாவட்டமான மத்தியப்பிரதேசத்தில் 14 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாகவும், 16 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், 6 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.