'7 ரூபாய்'..'சிங்கிள் கேரிபேக்'.. ரூ.15 ஆயிரம் 'நஷ்டஈடு' வாங்கிய இளைஞர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 20, 2019 05:51 PM

இளைஞர் ஒருவர் 7 ரூபாய் கேரிபேக்கை வைத்து ரூபாய் 15,000 ஆயிரம் நஷ்டஈடு வாங்கிய சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.

Carry Bag Issue: Court Fines 15,000 Rupees for Reliance Trends

கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம்,திருநெல்வேலியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற இளைஞர் அங்குள்ள ரிலையன்ஸ் டிரெண்ட் கடையில் துணிகளை வாங்கி இருக்கிறார்.அப்போது கேரிபேக் வேண்டும் என்றால் 7 ரூபாய் தனியாக தாருங்கள்  போடும் இடத்தில் கேட்டு இருக்கிறார்கள்.அதற்கு அவர் உங்கள் நிறுவனத்துக்கு தானே விளம்பரம் நான் எதற்கு தனியாக பணம் தர வேண்டும் என கேட்டிருக்கிறார்.மேலும் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி இது தவறு எனவும் கூறியிருக்கிறார். பதிலுக்கு இல்லை இது எங்கள் நிறுவனத்தின் கொள்கை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து தான் பணம் கொடுத்ததை ஒரு வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு அப்துல் பணம் கொடுத்து விட்டு வெளியே வந்துள்ளார். விட்டுவிட மனமில்லாமல் அங்குள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அப்துல் வழக்கு தொடர,வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு கேரி பேக்கிற்கான 7 ரூபாயுடன் ரூ.15,000 ஆயிரத்தை நஷ்டஈடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

மேலும்,''நிறுவனம் செய்தது தவறுதான். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விளம்பரம் அச்சடிக்கப்பட்ட பையைக் கொடுத்தால், இலவசமாகக் கொடுக்க வேண்டும்.விளம்பரம் இல்லாமல் ப்ளைன் கவர் கொடுத்தால் அதை நாம் காசு கொடுத்து வாங்கலாம்,'' என நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #TIRUNELVELI #CARRYBAG