‘ஒவ்வொரு தடவையும் இப்டியே பண்ண எப்டி ‘.. ‘கடுப்பான ஜடேஜா’.. தொடரும் ‘நோ பால்’ சர்ச்சை.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 17, 2019 10:43 PM
ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய சென்னை அணியில் மீண்டும் நோ பால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் டி20 லீக்கின் 33 -வது போட்டி இன்று(17.04.2019) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 7 -ல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இதனை அடுத்து இன்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா வழி நடத்துகிறார்.
இதனை அடுத்து டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 132 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக டு ப்ளிஸிஸ் 45 ரன்கள் எடுத்தார். இப்போட்டியில் புவனேஷ்வர்குமார் வீசிய பந்து ஒன்று ஜடேஜாவின் தலைக்கு மேல் சென்றது. இதனால் அதனை நோ பால் என நடுவரிடம் ஜடேஜா முறையிட்டார். ஆனால் அது நோ பால் இல்லை என நடுவர்கள் மறுத்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.
WATCH: No-Ball issue 2.0? Not really
— IndianPremierLeague (@IPL) April 17, 2019
📽️📽️https://t.co/FojRLzTgoN #SRHvCSK
