"பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோ போலியானது".. DGP சைலேந்திர பாபு விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோக்கள் போலியானவை என விளக்கம் அளித்திருக்கிறார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | கோர்ட்டுக்கு போற வழியில.. தப்பித்து போன நபர்.. மீண்டும் நீதிமன்றத்தில் சரண் அடைந்த வினோத சம்பவம்!!
வட மாநில தொழிலாளர்கள்
சமீப காலமாகவே தமிழகத்தில் வட இந்திய மக்களின் வருகை குறித்து வைரலாக பேசப்பட்டு வருகிறது. சமூக வலை தளங்களிலும் இது குறித்து விவாதங்கள் ஒரு பக்கம் நடைபெற்று வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலரை தமிழ் பேசும் வாலிபர் ஒருவர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறையினர் அறிவித்திருந்தனர். அதன்படி அவர் கைது செய்யப்பட்டார்.
Images are subject to © copyright to their respective owners.
வைரலான வீடியோ
இந்த சூழ்நிலையில், பீகாரை சேர்ந்த தொழிலார்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக இரண்டு வீடியோக்கள் அண்மையில் வெளியாகி இருந்தது. இது வைரலாகி பரவிய நிலையில் இந்தியா முழுவதும் இதுகுறித்து பேசப்பட்டும் வந்தது. இதனிடையே பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில்,"தமிழகத்தில் பணிபுரியும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து செய்தித்தாள்கள் மூலம் அறிந்தேன். தமிழக அரசு அதிகாரிகளுடன் பேசி, அங்கு வசிக்கும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பீகார் தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்" என பதிவிட்டு இருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
விளக்கம்
இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இந்த வீடியோக்கள் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர்," தமிழகத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல 2 வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோக்கள் போலியானவை. இரு வீடியோக்களும் ஏற்கனவே முன்பு நிகழ்ந்த இரு வேறு சம்பவங்களை திரித்து வெளியிடப்பட்டு இருக்கின்றன. ஒன்று திருப்பூரில் பீகார் தொழிலாளர்கள் இரு பிரிவாக மோதிக்கொண்டதுடன் தொடர்புடையது ஆகும். மற்றொன்று கோவையில் உள்ளூர் மக்கள் மோதிக் கொண்ட வீடியோ ஆகும். தமிழகத்தில் மக்கள் அமைதியுடன் வாழ்ந்து வருகின்றனர். சட்ட ஒழுங்கு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. போலி மற்றும் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார். தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் டிஜிபி சைலேந்திர பாபு பேசும் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
Message from The Director General of Police / HoPF
Tamil Nadu @bihar_police @NitishKumar https://t.co/cuzvY48sFk pic.twitter.com/vqKm4tANcx
— Tamil Nadu Police (@tnpoliceoffl) March 2, 2023
Also Read | மனைவியின் ஆசையை நிறைவேற்ற ரூ.7 கோடி செலவில் கோவில் கட்டிய கணவன்.. ராஜஸ்தானில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!