போடு.. சினிமாவில் களமிறங்கும் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிக்பாஸ் சீசன் 6-ன் போட்டியாளர்களான விக்ரமன், ஷிவின், ராம் மற்றும் ADK ஆகியோர் நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் அளித்திருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.
தமிழில் சிறந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி, இதுவரை மொத்தம் ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளது. அந்த வகையில் இதன் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக முடிவுக்கு வந்திருந்தது.
மொத்தம் 106 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியின் ஃபினாலேவிற்கு அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் முன்னேறி இருந்தனர். மொத்தமுள்ள 21 போட்டியாளர்களில் இருந்து இந்த மூன்று பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருந்த சூழலில், ஆறாவது பிக் பாஸ் சீசனின் டைட்டில் வின்னராக அசிம் தேர்வாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.
பிக்பாஸ் சீசன் 6
தொடர்ந்து பிக் பாஸ் குறித்த பேச்சுகள் இணையத்தில் பரவலாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் பிக் பாஸ் போட்டியாளர்கள் பல்வேறு இன்டர்வியூகள் கொடுத்து வருவதும், பல இடங்களில் செல்லும் போது மக்கள் அவருக்கு கொடுக்கும் அமோக வரவேற்பும் ஆகும். பிக்பாஸ் சீசன் 6-ன் போட்டியாளர்களுக்கு என சோசியல் மீடியாவில் ரசிகர் படையும் உருவாகி, போட்டி குறித்தும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களின் பங்களிப்பு குறித்தும் விவாதங்கள் நடத்தி வந்தனர்.
இந்த சூழ்நிலையில் பிக்பாஸ் சீசன் 6-ன் போட்டியாளர்களான விக்ரமன், ஷிவின், ராம் மற்றும் ADK ஆகியோர் நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்திருக்கின்றனர். பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்பட்ட தங்களுக்கிடையேயான நட்பு குறித்தும், 106 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் கிடைத்த அனுபவங்கள் பற்றியும் மனம் திறந்து பேசியிருக்கின்றனர்.
சர்ப்ரைஸ் கொடுத்த விக்ரமன்
நேர்காணலின்போது பிக்பாஸ்-க்கு பிறகு உள்ள திட்டங்கள் குறித்து கேட்கப்பட்டது. அப்போது பதில் அளித்த ஷிவின்," சீக்கிரமே பெரிய அறிவிப்பு வரும். அதுவரை வெயிட் பண்ணுங்க" என கூற, அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறினர். இதனையடுத்து பேசிய விக்ரமன்,"4 கதைகள் கேட்டிருக்கேன். அதுல ஒரு கதை ரொம்ப நல்லா இருந்துச்சு. கூடிய சீக்கிரம் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்" எனத் தெரிவித்திருக்கிறார். இதனிடையே ராம் புதிய பாடல் ஒன்றை வெளியிட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மற்ற செய்திகள்
