"அசிம் ஒண்ணும் TOUGH COMPETITOR இல்ல, விக்ரமன் தான்".. ஷிவின் நாமினேட் செஞ்சதுக்கு பின்னாடி இப்டி ஒரு விஷயம் இருக்கா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Feb 03, 2023 01:29 PM

தமிழில் நடைபெற்று வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன், மிகவும் சிறப்பாக நடந்து முடிந்திருந்தது.

Shivin says Azeem is not a tough competitor in bigg boss

Image Credit : Vijay Television

Also Read | "ஒரு உயிர் வரபோற நேரத்துல".. கர்ப்பிணி பெண், கணவர் பயணித்த காரில்.. திடீரென நடந்த அசம்பாவிதம்!!

மொத்தம் 21 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்த நிலையில், இறுதி சுற்றில் அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் முன்னேறி இருந்தனர். அதில் மக்கள் மத்தியில் பிரபலமான பலர் இருந்த சூழலில், அதிக அறிமுகம் இல்லாத ஷிவின் கூட பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தார். தான் பேசும் விஷயத்தில் நிலையாக இருக்கும் ஷிவின், யாராக இருந்தாலும் தனது கருத்துக்களை ஆணித்தரமாக பேசக்.கூடியவர்.

இதனால், ஷிவினுக்கு ரசிகர்கள் அதிகரித்ததுடன் மட்டுமில்லாமல், Freeze டாஸ்க்கில் வந்த போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் தங்களின் மகள் என குறிப்பிட்டு பேசி இருந்ததும் அவரை மனம் நெகிழ வைத்திருந்தது. இதற்கிடையில், பிக் பாஸ் 6 ஆவது சீசனில் Finale வரை முன்னேறி இருந்த ஷிவின், 3 ஆவது இடத்தையும் பிடித்திருந்தார்.

Shivin says Azeem is not a tough competitor in bigg boss

Image Credit : Vijay Television

தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் தற்போது வெளியே வந்துள்ள ஷிவினுக்கு மக்கள் ஆதரவும் அமோகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை ஷிவின் அளித்துள்ளார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும், சக போட்டியாளர்கள் குறித்தும் நிறைய கருத்துக்களை ஷிவின் பகிர்ந்து கொண்டார்.

Tough போட்டியாளராக இருந்ததால் அசிமை அனைத்து வாரங்களில் நாமினேட் செய்தீர்களா என்ற கேள்வி ஷிவினிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஷிவின், "ஒருபோதும் இல்லை. அப்படி Tough Competitor -அ நாமினேட் பண்ணுற மைண்ட் செட் எனக்கு இல்ல. அப்படி எல்லாரையும் அனுப்பி யாரு கூட நம்ம விளையாட போறோம். அதுனால Tough போட்டியாளரான நான் அசிமை பார்த்ததே கிடையாது. என்னை பொறுத்தவரைக்கும் Tough Competitor யாருன்னா கண்டிப்பா விக்ரமன் தான். நிறைய தடவை நான் சொல்லி இருக்கேன். நான் வீட்டை விட்டு வெளியேத்துறதுக்காக அசிம் பெயரை நாமினேட் பண்ணிட்டு இருந்தேன்" என தெரிவித்தார்.

Shivin says Azeem is not a tough competitor in bigg boss

Image Credit : Vijay Television

ஷிவின் சொல்வதை தான் பிக் பாஸ் வீட்டில் விக்ரமன் கேட்டதாக அசிம் அடிக்கடி குறிப்பிட்டது பற்றி ஷிவின் விளக்கம் கொடுத்துள்ளார். "அந்த வீட்டுல எனக்கு நிறைய தடவ சண்டை நடந்தது விக்ரமன் கூட தான். ஒருவேளை, அசிம் வெளிய வந்து பாத்தாருன்னா எனக்கும் விக்ரமனுக்கும் இருக்குற Opinion Difference என்னன்னு பாத்திருப்பாரு. நான் சொல்றதுக்கு எல்லாம் ஆமான்னு அவரு சொல்றதா இருந்தா, நாங்க சண்டையே போடாம ஜாலியா இருந்துருக்கணும்.

Shivin says Azeem is not a tough competitor in bigg boss

Image Credit : Vijay Television

எங்க ரெண்டு பேரோட கருத்து ஒரே மாதிரி இருக்குறப்போ ஒரு வேளை பாக்குறவங்களுக்கு அப்படி தோணும். நான் அசிம்க்காக கூட விக்ரமன்கிட்ட எதிர்த்து பேசி இருக்கேன். பாக்குற கண்ணோட்டம் தான். அப்படி எடுத்துக்கிட்டா கூட நான் அதை ஏத்துக்குறேன். அவரு நிறைய நல்ல விஷயங்கள் பேசுறாரு, எனக்கு தோணுறத அவரு பேசுறாருங்குறப்போ நான் அதை ஏத்துக்குறது தப்பே இல்லைல்ல. ஆனா, எனக்கு உண்மையா தோணாத  விஷயங்கள் அவரு பேசுறப்போ, நான் நிறைய தடவ கேட்டு சண்டை போட்டுருக்கேன். அசிம் வெளிய வந்து எல்லாத்தையும் பாத்து இருந்தாருன்னா அவரோட Perception இப்போ மாறி இருக்கலாம்" என ஷிவின் தெரிவித்தார்.

Also Read | "கர்ப்பமான ஆண்?".. இந்தியாவில் முதல் முறை..! கவனம் ஈர்த்த மூன்றாம் பாலின தம்பதி!!

Tags : #SHIVIN #AZEEM #BIGG BOSS 6 TAMIL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shivin says Azeem is not a tough competitor in bigg boss | Tamil Nadu News.